"தாய்" என்ற ஒரு வார்த்தை சிறு வார்த்தைதான்,
ஆசை மிகுதியில், பொய்யான அலுப்பில்
கணவன் அழைப்பான் மனைவியை "தாயே!"
பாசம் வழிய பிரிய மகளை அழைக்கும்
தந்தைக்கு கிடைத்த வார்த்தையும் "தாயே!"
வளங்கள் பொங்கும் இயற்கையும் தாயே,
போற்றுகின்ற பிறந்த பொன்னாடும் தாயே,
கருணைக்கடலாம் இறைவனும் ஈங்கு தாயே,
இராப்பிச்சையின் அழைப்பிலும் தாயே,
அரசியல் தொண்டர் நாவிலும் தாயே,
எங்கும் நிறைந்தவளே, அன்னையே,
சக்தியே, ஆதரிப்பாயே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment