திருத்தமான வட்ட முகமொன்றை
வானத்திரையில் வரைந்து விட்டு
வெள்ளை வண்ணம் குழைத்துப் பூசி
ரசித்த ஓவியனும் திருட்டி கழிந்திட
ஒத்தையாய் கருப்பில் ஒரு பொட்டு
வைத்திட மறந்ததால் பதறினான்
பிடித்திட்ட தூரிகையை உதறினான்
ஆகா! வானில் எத்தனை தாரகை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment