தெரியவில்லை எது எனக்கு தெரியுமென்று;
இதை அது என்றும், அதை இது என்றும்
தவறாக எண்ணியிருந்தேன் - இல்லை,
எது என்ன என்று எண்ணாமலிருந்தேன்,
கிழக்கே உதித்து, மேற்கே சாயுது
என்று நினைத்த சூரியன் பாவம்
ஓரிடத்தில் நிற்க நாந்தானே சுற்றுகிறேன்!
மாயாமயக்கமிது-மக்காய் மக்களை ஆக்குது,
மதியை வளர்த்து, மயக்கம் தீர
மனம் என்று விரும்புமோ?
ஏன், எதற்கு, எப்படி என்று சாக்ரடீஸ் போல
அறிவை தீட்ட வேண்டாமோ?
பிரபஞ்ச எல்லை வரை
சிந்தனை நீண்டிட வேண்டாமோ?
Tuesday, March 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment