நீயும் நானும் நிழலும் நிசமுமாய்
நகமும் சதையுமாய் ஊனும் உயிருமாய்
பூரியும் கிழங்குமாய் புரோட்டாவும் குருமாவுமாய்
பூட்டும் சாவியுமாய் கணிணியும் கீபோர்டுமாய்
இன்னும் இதுபோல் பலவுமாய் இருக்கையிலே
இந்த நிழல் யுத்தம் ஏதுக்கடி என்னவளே?
வெற்றியின் களிப்பும் தோல்வியின் களைப்பும்
உனக்கும் எனக்கும் வெவ்வேறாய் இருக்குமோ?
இரு கண்கள் காணும் ஒரு காட்சியாய்
இரு தண்டவாளம் தாங்கும் ஒரு வண்டியாய்
நம் வாழ்க்கை இருப்பது காண்கிலையோ?
இந்த வீம்பும் வீராப்பும் வீணில்லையோ?
வாடிய பயிர் எனை கண்டு வாடாத வள்ளலாரோ?
கல் மனதில் ஈரம் கசிவதில்லையோ?
என் தாபம் தணிய வழியில்லையோ?
பொய்க் கோபம் முடிந்து போகாதோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment