ஆடவனே! ஆதவன் என்றுன்னை
எண்ணி இறுமாந்தவனே!
நீ உமிழும் ஒளியிலே
வெறும் கண்ணாடி பிம்பமாய்,
சோகை நிலவாய், பிறையாய்
தேய்ந்து தேய்ந்து வளரும்
பேதை என்றே பெண்ணை
எண்ணி மெய் மறந்தவனே!
ஒரு பிரமையிலே மிதப்பவனே!
எரிக்கும் கனலாய் தணலாய்
நிற்கும் சக்தி பெண்ணடா!
பிறப்பின் இருப்பிடம் அவளடா!
சிறப்பின் பிறப்பிடம் அவளடா!
அவளின் இரவல் நிழலாய்
இளைத்து சுற்றிச் சுற்றி
நிலவாய் திரிபவன் நீயடா!
பொய்க்கனவை உதறிடு!
உறங்காதே எழுந்திரு!
சூரியக்கனலை போற்றிடு!
Tuesday, March 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment