சூட்டி மகிழ்ந்திடு பெண்ணே மணம் நிறைந்த மல்லிகையை,
காட்டி சிரித்திடு கண்ணே கையில் மருதாணி சிகப்பழகை,
போட்டி ஏதடி அன்னமே புடவையின் பேரெழிலுக்கு,
எட்டி செல்லடி செல்லமே கயவர் கூடும் இடமிருந்து,
வெட்டி வீழ்த்திடு கொழுந்தே வேண்டாத இச்சைகளை,
தட்டிக் கேளடி தளிரே தவறுகின்ற தலைமுறையை,
கட்டிக் காத்திடு கனியே கண்ணியமெனும் கவசத்தை,
பூட்டி வைக்க முடியாது பூவையே புலருகின்ற பகலினை,
கெட்டிக்கார பாவையே கெடாமல் நீயிருக்கும் போதிலே
கொட்டிக் கிடக்குது கொடியே கோடி இன்பம் பாரிலே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment