Tuesday, March 16, 2010

தாகம்

சொம்புக்குள் கடல் சுருங்குமா?
கணத்துக்குள் யுகங்கள் அடங்குமா?
பிறவியின் போக்கு பிடிபடக்கூடுமா?
அலையும் ஆவி அமைதியைத் தேடுமா?
வாழ்வின் மெய்ப்பொருள் கண்டவருண்டா?
அது மணக்கின்ற மல்லிகை செண்டா?
செங்கன்னல் சாற்றின் கல்கண்டா?
சேற்றில் சிக்கிய தாமரை தண்டா?
பூங்கூட்ட தேனறிந்த சிறு வண்டா?
பக்கவாட்டில் நடக்கின்ற நண்டா?
தர்க்கமும் தத்துவமும் இனி வேண்டா-
தாகம் தீரும் தருணம் தானே வந்திடாதோ?

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community