விட்டது எதை பற்றியது எதை
விளங்கவில்லை இன்று வரை
கேட்டது எதை கேளாதது எதை
கணக்கிட்டு பார்க்கவில்லை
பட்டது எதை படாதது எதை
புலப்படவில்லை புத்தியில்
இட்டது எதை இடாதது எதை
இடது கைக்கு தெரியவில்லை
போட்டது எதை போடாதது எதை
பிரமன் எழுத்து புரியவில்லை
புரியாத புதிராய் வாழ்வென்பது
மொத்தத்தில் மெத்த நன்றானது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment