“இவன் வாழ்க்கை கணக்கை வாசி, சித்ரகுப்தா!
கொதிக்கும் கொப்பரையா, கற்பகச்சோலையா
எங்கே அனுப்புவதென்று யாம் தீர்ப்பு கூறுவோம்”
என்ற எமதர்மராஜனின் இறுதிக் கூற்றை
எண்ணாமலே இங்கே அந்தோ! எத்தனை பேர்!
சாராயம் விற்று செழித்தவனும்,
கொள்ளை அடித்து கொழித்தவனும்,
கள்ள வோட்டில் வென்றவனும்,
கள்ளத் தொடர்பு கொண்டவனும்,
தந்தை தாயை துரத்தியவனும்,
வேற்று மதத்தை வெறுத்தவனும்,
நல்லொழுக்கம் மறந்தவனும்,
நாணயத்தை துறந்தவனும்-
எண்ண முடியா பல ஈன வகை-
தன் தவறை உணராத அயோக்கியரும்,
உணர்ந்தும் திருந்தாத அபாக்கியரும்
பெருகிப்போன உலகும் உய்வதெப்போ?
Tuesday, March 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment