Monday, March 15, 2010

நகைச்சுவை

தூறலாய் சாரலாய் இதுவும்
மண்வாசனையாய் இதமாய்
மனசுக்கு சுகமாய் இருக்கும்
நகைச்சுவை என்ற பெயரிலே
தீங்கில்லா ஒரு சுவை அது
பகிர்ந்திட ஒரு நல்ல துணுக்கு
எடுத்துச் சென்ற புத்தகத்தை
நூலகத்தில் கொடுக்க வந்தான்
கோபம் கொண்டு கத்தினான்
எத்தனை கதாபாத்திரங்கள்
இல்லை கதையென்று ஒன்று
வெறும் பெயர்களே முழுதுமே
அமைதியாக வினவினார்
நூலக அலுவலர் கிறுக்கனிடம்
டெலிஃபோன் டைரக்டரியை
எடுத்துச் சென்றது நீதானா

2 comments:

IndiBlogger - The Indian Blogger Community