Monday, March 15, 2010

பாடம்

பூமாதேவி போன்றவள் அவளே
பொறுமை அறிந்தவள் அன்னையே
போகிற போக்கில் அதையே
கற்றுத் தந்திட அறிந்தவள்தானே
ஒருநாள் அப்பம் சுட்டாள்
தட்டில் வைத்தாள் சூடாய்
ஆகா வாசம் அபாரம்
ஆவலும் பசியும் அதிகம்
அருமை மகன் அமர்ந்தான்
அவசரமாய் ஆத்திரமாய்
நட்ட நடுவில் தொட்டான்
விரலைச் சுட்டுக் கொண்டான்

புத்தியில்லா சந்திரகுப்தன்
நேரடியாய்த் தலைநகரைத்
தாக்கித் தோற்றது போல்
நீயும் ஏனடா செய்தாய்
ஆறத் துவங்கிய ஓரத்தை
விண்டு எடுத்துச் சுவைக்காமல்
ஏமாந்து சூடு பட்டாயே என்று
பரிகாசம் செய்தாள் எளியவள்

துவண்டு நின்ற சந்திரகுப்தன்
புத்தியில் உறைத்தது இம்மொழி
பிழையின்றி யுக்தியை பின்பற்ற
பின்னாளில் மாமன்னன் ஆனானே
ஆத்திரம் அவசரம் ஆகாது
வேதனை தோல்வி விளைந்திடும்
தந்திரம் நிதானம் இரண்டும்
காரியம் சாதிக்கத் தேவை
சந்திரகுப்தனும் சாணக்கியனும்
கற்ற சாதாரண பாடமிது

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community