Monday, March 15, 2010

தாராள மனசு

தாயினுடையது தாராள மனசு
ஈரம் வற்றாத அமுத ஊற்று
வாய் உதிர்க்கும் வசைமொழி
கை ஓங்கும் ஆத்திரத்தில்
கடுமையான எச்சரிக்கைகள்
அத்தனையும் பாசாங்குகள்
உறங்கும் போதும் ஒரு கனவு
விழிப்பினிலும் ஒரே நினைப்பு
கண்காணிக்கும் பரிவில்
கர்ப்பப்பையின் கதகதப்பு
அடுப்பை மூட்டும் போதும்
உப்பை எடுக்கும் போதும்
கடுகை தாளிக்கும் போதும்
உள்ளங்கையில் ஊற்றிய சொட்டு
கணிக்கப்படும் தீவிரத்திலும்
தெரிவது ஒரு யாகமா
தன்னை மறந்த தியாகமா
முழு வாழ்வும் ஓர் தவமா
மகவாய் பிறந்திட வேண்டும்
இப்பேறில் சுகித்திருக்க
தாயாய் பிறந்திட வேண்டும்
தரணியை தன் வசமாக்க

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community