Monday, March 15, 2010

சுகமே

இனிமை இதிலே காண்கிறார்
என்னால் இன்பம் அடைகிறார்
அணி அணியாய் நிற்கிறார்
அங்கும் இங்கும் ஓடுகிறார்
பாய்ந்து பாய்ந்து விரட்டுகிறார்
மாய்ந்து மாய்ந்து தடுக்கிறார்
மூலைக்கு மூலை துரத்துகிறார்
மடக்கி மடக்கி கடத்துகிறார்
ஆளுக்கு ஆள் அடிக்கிறார்
ஓடி ஓடி உதைக்கிறார்
கால்பந்தென் கதியிதுவே
கரவொலி காதில் சுகமே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community