உயிர் அழகு, மெய் அழகு,
உயிர்மெய்யும் அழகு,
ஒலி அழகு, சொல் அழகு,
காய் விடுத்து கனி போல்
வாக்கினை சொல்வது அழகு,
சுவை அழகு, நயம் அழகு,
பக்குவமாய் பலவும் சொல்ல
சீரிளம் நடை அழகு,
எதுகை மோனையுடன்
கவிதைத்தேர் அழகு,
காவியக் கதை அழகு,
பிரசங்க பேச்சும் அழகு,
எப்பாத்திரத்தில் இட்டாலும்
இசைந்து இலங்கும் அழகு,
ஆழம், அழுத்தம் அழகு,
சங்கம் வளர்த்த அழகு,
சந்தம் கொஞ்சும் அழகு,
சொந்தம் எல்லாம் எமக்கே-
தமிழே! தேனே! அமிர்தமே!
No comments:
Post a Comment