ஆண்டாண்டு காலமாய் அவனும்
ஆணவமாய் அதிகாரம் செய்கிறான்
அடக்கிதான் வைக்கிறான் அவளை
அபலை போலத்தான் வெளியிலே
அவளும் காட்சி தருகின்றாள்
அம்மாடி அதுதானா நிலவரம்
அணுவும் அசையுமோ அவளின்றி
அவளுக்காவே அவளைச் சுற்றியே
அவனுலகம் இயங்குதே அறியாமலே
அச்சாணிக்கு அடங்காத சக்கரமா
ஆதாரமான தாரம்தானே அரசி
No comments:
Post a Comment