தான் என்ற ஒன்று
தரணியில் இன்று
காற்றாய் சென்று
நிறையும் என்று
எதிர்பார்த்ததன்று
நீ ஆணி
நான் சுத்தியல்
என் அடிதான்
உன் தலைக்கு
மோட்சம்
நீ செருப்பு
நான் கால்
எனக்காக தேய்
பிறந்த பயனை
அடைவாய்
இப்படித்தான் நடந்தது
மூளைச்சலவை
சத்தமில்லை
சங்கடமில்லை
வண்டி ஓடியது
ஆணின் வேதம்
உடைக்கும் பூதம்
அடுக்குது வாதம்
போடுது கோஷம்
கலையுது வேஷம்
மருந்துக்கு உண்டு
விளைவென்று ஒன்று
பக்கவிளைவு ஒன்று
புரட்சிக்கும் உண்டு
இவ்விளைவிரண்டு
தாய்மைச் சுடர்கள்
காவியத்தொடர்கள்
தரமான வைரங்கள்
தாரமான நெருப்புகள்
ஈரமான நெஞ்சங்கள்
சுதந்திர பறவைகள்
அபூர்வ சிந்தாமணிகள்
அல்லி ராணிகள்
மதியா வேதாளங்கள்
புதிய பூபாளங்கள்
கள்ளமில்லா மொட்டுக்கள்
களம் வெல்லும் சிட்டுக்கள்
கலையின் மாடங்கள்
இலக்கிய ஓடங்கள்
இனிக்கும் பாடங்கள்
திறந்த தொந்திகள்
அரிதார மந்திகள்
அறுசுவை பந்திகள்
கலியுக குந்திகள்
பண்பின் அந்திகள்
திறந்த மேடைகள்
திரண்ட தேனடைகள்
ராணி தேனீக்கள்
கூர் கொடுக்குகள்
அடிமை ஆணீக்கள்
விதைத்தது திணை
விளைந்தது வினை
தொடுக்குது கணை
சொல்லுது நினை
உண்மைதனை
தோட்டக்காரா
கைகட்டி நிற்பாயா
களை எடுப்பாயா
பயிர் வளர்ப்பாயா
பலன் பெறுவாயா
No comments:
Post a Comment