பூலோக வார்ப்பிலே வடிக்காதவளே
அபூர்வ தேவதை வகையினளே
ஊர்வசி மேனகை திலோத்தமையே
வானவில்லாய், ஒரு கோடி மின்னலாய்,
ரோஜாக்கூட்டமாய், ஆப்பிள் தோட்டமாய்
என்னைத் துரத்தும் ஆவியே
தூங்க விடாத பாவியே
வண்டார்குழலியே
அல்வாத்துண்டு இடுப்பிலே
செண்டிமீட்டர் சிரிப்பிலே
சிவந்த உதட்டு சுழிப்பிலே
ஜாகிர் உசேன் தபலா பின்னழகிலே
காதல் தீயை மூட்டிய பிசாசே
சர்க்கரை நிலவே சமையலறை உப்பே
அழகான ராட்சசியே
அலங்கார வல்லியே
வறுத்த கோழி இறக்கி வச்சி
காத்திருக்கும் சரக்குக்காரியே
சக்கரைவள்ளிக் கிழங்கே
பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும்
சிவப்பு லோலாக்கு இழுக்குதடி அச்சச்சோ புன்னகையை
கைக்குட்டையில் பொத்தி வைக்க முடியலையே
குப்பை மேட்டில் பூத்த ரோசாவே
கணக்கு பண்ண வரட்டுமா
இச்சுத்தரவும் கிச்சு கிச்சு மூட்டவும்
காலம் நேரம் பாக்கலாமா
ஓடிப் போயி குடித்தனம் பண்ணலாம்
பின்னாலே கண்ணாலம் கட்டிக்கலாம்
பிள்ளகுட்டி சாட்சியா
ராக்கெட்டு வேகத்தில பறக்கிற உலகத்திலே
கட்டைவண்டி வேண்டாண்டி
நாட்டுக்கட்டையே ரகசிய சிநேகிதியே
ராத்திரி பூத்த தாமரையே
அத்து மீறும் ஆசை வந்ததே
அர்த்தஜாம பூஜை நடத்துவோம்
அப்படியே செத்துவிட தோன்றினால்
அதையும் செய்திடுவோம்.
____________________________
No comments:
Post a Comment