Monday, October 12, 2015

சின்னவளே

IndiBlogger - The Indian Blogger Community சின்னவளே பொன்மகளே 
சிறந்தவளே ஆளப்பிறந்தவளே 
கனிரசமே கவிதைக்கருவே 
பூமணமே தாயினமே 

சிரிக்க வேண்டும் நீ 
சிங்காரிக்க வேண்டும் 
இன்பச்சிறையினில் 
உன்னவனை அடைக்கவேண்டும் 

பட்டமாய் அவனை பறக்கவிடு 
நூலின் நுனியை இறுகப்பற்று 
வானிலைக்கேற்ப பரவசமாய் 
ஏற்றி இறக்கி பார்த்துவிடு 

அவன் நாவின் ருசியறிந்திடு 
அதன் போக்கில் விளையாடிடு 
நயமான நலத்தை கருதிடு 
கடிவாளமும் போட்டுவிடு 

தோளில் புதைந்து உருகி கரையட்டும் 
மடியில் புரண்டு சேயாய் மகிழட்டும் 
நிழலாய் தொடர்ந்து நிதமும் காக்கட்டும் 
நினைவெல்லாம் நீயாக இருக்கட்டும் 

ஆயுட்கைதியவன் ஆனந்தப்படவேண்டும் 
ஆணைக்குள் அடங்கிடும் ஆண்டவனவன் 
ஆதியும் அந்தமுமாய் அணைத்து நிற்பவன் 
அவனின்றி பேறெதனை நீ பெற்றிடுவாய் 

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community