நீண்டதோர் பூச்சரம்
வடக்கேயிருந்து தெற்கே
வருவாரே யாத்திரையாக
குமரிமுனை அடைந்து
கும்மாளமாய் முக்கடல்
கூடி ஆரவாரம் செய்யும்
கோலகல காட்சியை கண்டு
பாரத தேசம் முடியும் இடம்
இது என்பார் தீர்மானமாய்
இல்லை என்பார் எமதருமை
தீந்தமிழர் திரும்பி நின்று பார்
தேசம் துவங்குகிறதிங்கென்று
என்னே எம் இறும்பூது இது
No comments:
Post a Comment