இரவின் பிரிவில் வருந்தமாய்
ஆற்ற நினைத்தது ஆதவன்
கரம் நீட்டியது ஆதரவாய்
கண்ணீர் துடைத்திடவே
இரவிற்காக காத்திருக்க
வந்தது வேறொரு இரவு
எதிர்பாரா விரைவுடனே
பசு ஒன்று மேய்ந்ததிலே
பகல் கனவு முடிந்தது
ஆசைகள் தொடரும் பாரிலே
ஆண்டவன் விரும்பும் வரையிலே
இதை புரிந்தும் புரியாமலுமாய்
மீதமிருக்கும் புல் இரவிற்காக
அழுகிறது விடிகாலையிலே
ஒத்தை மாடு வந்திடலாம்
மந்தையாய் வந்தும் மேயலாம்
மேய்ப்பவன் மனம் போனபடி
திரையோ மூடி மூடி விலகும்
தினமும் நாடகம் தொடரும்
No comments:
Post a Comment