விழிக்குள் நுழைந்தவளே
விபத்தாகிப் போனவளே
விழுந்த கணம் முதலாய்
அவதிதான் படுகிறேன்
கண்ணே உள்ளே வந்தாய்
கலகம் துவக்கினாய்
உறுத்தத் துவங்கினாய்
ஒளிந்து விளையாடுகிறாய்
தேய்த்துப் பார்க்கிறேன்
நீ அழியவில்லை
துடைத்துப் பார்க்கிரேன்
நீ போகவில்லை
கழுவிப் பார்க்கிறேன்
களைய முடியவில்லை
கலங்கிப் போயின கண்கள்
சிவந்து போயின கண்கள்
எரிச்சலடைந்தன கண்கள்
கண்ணீர் விடும் கண்கள்
கண்ணுக்குள் நீ வந்தே
துன்பம் இத்தனை தந்தே
வருத்தும் சிறு காதலியே
பொறுக்க முடியலையே
எப்படி நான் துயிலுவேன்
உள்ளிருந்து உறுத்துகிறாய்
விட்டகல மறுக்கிறாய்
விட்டத்தை வெறிக்கவோ
கொட்டாவி விட்டபடியே
விடியும் வரை விழித்திருக்க
தண்டனை தந்தவளே
உன்னை நான் வெல்லுவேன்
உறங்கித்தான் பார்ப்பேன்
காலையில் கண்விழிக்கையில்
காணாமல் போவாயே
கண்ணுக்குள் விழுந்த தூசியே
No comments:
Post a Comment