கனவில் வந்த செந்தாமரையை
ஆலோலமென கூவிய வள்ளியோ
அர்ச்சுனனை அடைந்த அல்லியோ
சூடிக் கொடுத்த பாவை கோதையோ
குழல் கேட்டு மயங்கிய ராதையோ
பொன் மானைக் கேட்ட சீதையோ
மோதிரம் தொலைத்த சகுந்தலையோ
நளனைத் தொலைத்த தமயந்தியோ
சொக்கேசனின் மதுரை மீனாளோ
அவள் தோள் மீதமர்ந்த கிள்ளையோ
எகிப்திய அழகி கிளியோபாத்ராவோ
எவளோ இவள் எக்காவிய நாயகியோ
No comments:
Post a Comment