வாசமலர் கதம்ப சரங்கள்
எண்ணங்களின் வண்ணங்கள்
கற்பனை தீட்டும் ஓவியங்கள்
கருத்துக்களின் பிம்பங்கள்
வசியம் செய்யும் மகுடிகள்
வாதங்களின் ஒய்யார படகுகள்
கலகங்களின் பெரும்காரணிகள்
மெளன வேடம் தரிக்கையில்
அவை அடையும் புது பலம்
மீட்க முடியா வாய் அம்புகள்
வளர்க்கும் ஏராள வம்புகள்
புத்திசாலிதனத்தை மூடகத்தை
அறிய உதவும் அளவுகோள்
அளவாய் கையாண்டால்
அவைதானே மந்திரக்கோல்
No comments:
Post a Comment