கனவுடன் பரிச்சயம் பிறந்த உடனே
நரி விரட்டுதென்பார்கள் கிழவிகள்
கள்ளமில்லா வயதில் கண்கள் விரிய
கதை சொல்வர் கண்ட பீதி கனவுகளை
புரியத் துவங்கும் வயதில் விழிகளில்
ஏற்றுவர் கனவுகளை விழித்துக் கொண்டே
பருவ வயதில் பல வண்ணக் கனவுகள்
பட்ட பிறகு மிச்சம் கொஞ்சம் கனவுகள்
பளபளப்புக் குறைந்து திரும்பிப் பார்க்க
அசை போட்டு மகிழும் சங்கதிகள்
அப்பட்டமாய் தெளிந்த நனவுகள்
இன்னும் இருக்கு ஆசை நினைவுகள்
No comments:
Post a Comment