முழுதாக மூடிக் கொண்டிருக்கும் மாங்கனியே!
உனை தீண்டாதென் உயிர்தான் தரிக்குமோ?
வலைக்குள்ளே வனப்பான வண்ண மயிலே!
நானின்றி வந்ததுவோ உனக்கு பூந்துயிலே?
எட்டி நில்லென்று கட்டளையோ, தேன்மலரே!
உனைத் தொட்டாலன்றி எந்தன் பசியாறுமோ?
வாசனை பூச்செல்லாம் பூசிய பூங்காற்றே!
வரவிடாதெனை விரட்டுவது தர்மந்தானோ?
நறுமணம் வீசும் வத்தி கொழுத்திய நல்லழகே!
நச்சாலே எனை நசித்தலும் நியாயந்தானோ?
கொல்லும் படை கொண்ட என் இனிய விருந்தே!
வெல்லும் வகையில் வீரியம் வளர்க்கமாட்டேனோ?
என் உயிரின் தாரமே! அரிய காரமே!
அன்னமே! கட்டிக்காவல் தாண்டி வந்து கடிக்காமல் விடுவேனோ?
No comments:
Post a Comment