சின்னஞ்சிறு விதையிலே
பெரிய மரம் வளர்ந்தது
கனியும் நிழலும் தந்தது
கற்பகத் தருவாய் ஆனது
குஞ்சுக் கையும் காலுமாய்
பிஞ்சுக் குழந்தை பிறக்குது
வலிய தோளுடன் வளர்ந்து
வாலிபனாய் ஆகி நிற்குது
ஆழ உழுது விதைத்த பின்
வரப்பு கட்டி நீர் பாய்ச்சி
களையெடுத்து உரமிட்டு
விளைச்சல் கண்டிடலாம்
பாலும் சோறும் ஊட்டுகையில்
பண்பும் நெறியும் கதைகளாய்
சொல்லி வளர்த்த நம் பாலகன்
நாளை உலகின் நல்ல நாயகன்
வெயில் பார்த்து நிழல் பார்த்து
தழை ஒடித்து கிளை மடித்து
வளர்த்த தோட்டம் சிரிக்குது
வனப்பாய் இல்லம் துலங்குது
அறிவை வளர்த்து ஆசை அளந்து
சிறகை விரித்து வானில் பறந்து
உகந்தது பகுத்து தரம் பிரித்து
மிகுந்திடாது எல்லை வகுப்போம்
வம்ச விருட்சங்கள் கூட்டத்திலே
இயற்கையுடனே கை கோர்த்து
வரலாறு வளமாய் வழி நடக்க
இணையில்லா தீபாவளியென்றுமே
No comments:
Post a Comment