வெறும் ஆனந்தமா
அறிய முடியவில்லை
பிரம்மநிலையோ
தனி யோகமோ
தவ மோனமோ
பேரின்பந்தானோ
பகலா இரவா
புரியவில்லை
குளிரா வெயிலா
பொருட்டாயில்லை
கணங்களா யுகங்களா
கவனமில்லை
விழிப்பா உறக்கமா
விளங்கவில்லை
கேள்வியா பதிலா
தேவையில்லை
கசப்பா இனிப்பா
கவலையில்லை
நீயா நானா
வேறில்லை
ஓரியக்கம் ஓரிலக்கு
சுகமான பயணம்
No comments:
Post a Comment