Monday, October 12, 2015

திரு

IndiBlogger - The Indian Blogger Community வைரக்கல் ஆதியில் கரிக்கட்டிதான்
வருடக்கணக்காய் அழுந்தி புழுங்கி
வெளிப்பட்டது மின்னும் அழகொளி
வெட்டவொண்ணாவோர் உறுதி
ஆர்ப்பரிக்கும் கடல் மேலே அலை
ஆழியின் ஆழத்தில் பேரமைதிமயம்
அரிய உயிரினங்கள் இயங்குமங்கு
ஆடம்பரமில்லா அருமையின் பெருமை
வெந்து நொந்து வளரும் உறமான திரு
ஆழத்து நிலவரம் அறியவியலா மாய்மாலம்
ஆனந்த ஆரவார அவள் அரிதாரக்கோலம் 
அறியார் சிறுமதியார் அந்தோ பரிதாபம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community