சிந்தித்தபோது....
சிரிக்கும் சிங்காரப் பூவது
தன் எழில் உணர்ந்தபடி
பெருமையில் திளைத்தபடி
வாழ்வின் வண்ணமுடுத்தி
கர்வத்தனிமை காத்து
அழகில்லா உலகின் தளைகளுடைக்க
விண்ணோடும் சூரிய சந்திரனோடும் நடனமாட விழைந்து
மாந்தர் கண்டு வியந்து ஏங்கும் விதமாய்
வண்ணமும் திண்ணமும் விஞ்சிடும் நிலை காணும் தாகத்துடனிருந்தது.
வந்தான் தோட்டக்காரன்
மடிந்தது ஓருயிர் கத்திரியின் ஒரு சொடக்கிலே
தோட்டத்தில் மாற்றம் நிகழவில்லை -
பூக்கள் தொடர்ந்து பூத்துக் குலுங்கின
மென்காற்றில் நறுமணம் சிந்தின
மலரொன்றுதான் மறைந்தது .... தொடருது நியதி

No comments:
Post a Comment