Monday, September 21, 2015

நீயம்மா

IndiBlogger - The Indian Blogger Community நீயம்மா நீயேதானம்மா
உன் விதியை எழுதுவது
அடிபட்டு மிதிபட்டு அபலையாய்
கண்ணீரில் உழல்வாயா
கல்வியும் காசுமிருந்தும்
அவலமாய் வாழ்வாயா
எதையெல்லாம் சுமப்பாய்
எத்தனை காலம் ஏமாறுவாய்
தியாகச்சடரே தெய்வமே
தேயத்தான் சந்தனம்
எரியத்தான் கற்பூரம்
உன் சந்நிதியிலிருப்பது
சாத்தானா தேவனா
தகுதியுள்ளவனை இருத்து
துஷ்டனை துவம்சம் செய்
அண்டத்தை ஆளும் நாயகியே
ஆக்கும் அழிக்கும் சக்தியே
வழி காட்டும் ஜோதியே
பலியாகாதே வீணே ஈனருக்கு
பலமாகு விளக்காய் வாழ்வதற்கு
பாம்பிற்கு விஷத்தையும்
தேளுக்கு கொடுக்கையும்
பரமன் ஏன் கொடுத்தான்
இழப்பதற்க்கினி ஏதுளது
உயிர் மட்டுந்தானே மிச்சம்
போர்வீரக்குண்டோ அச்சம்
உயிர் அவர்கென்றும் துச்சம்
போரில் வலிக்குமோ சாவு
பகைவனிடம் தோல்வியளவு
கவ்விய தர்மத்தை சூது
துப்பிட காத்திருப்பாயா
நெஞ்சு பொறுக்குதில்லையேயென
நெக்குருகிய நல்வீணை பாரதி நீயா
கயமை கண்டு வெகுண்டு
பொசுக்கக் கிளம்புவாயா 
அவன் கண்ட அக்னிக்குஞ்சாய்
திக்கெட்டும் கொட்டட்டும் முரசு
அறியட்டும் அடக்கிப் பழகியவர்
அழியுமினி அதர்மமும் அநீதியுமென
தடம் பிறளா தேவியே
தன்மான வீரியே
களம் வெல்ல வருவாயா
கோபுரங்கள் சாய்வதில்லை
கணக்குகள் தவறுவதில்லை
காலப்பந்து உன் கையில்
கலங்காதே கவலை விடு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community