பெண்ணே பேரழகே
பாடப்பெறும் உருவே
கவிதைகளின் கருவே
கண்ணே மணியே
கனியே சிலையே
மானே மீனே
தேனே தேரே
மொட்டே சிட்டே
பட்டே தேட்டே
பூவே பெளர்ணமியே
பொன்னே பூபாளமே
உவப்பான உவமைகள்
எத்தனை எத்தனையோ
பற்பல உறுப்புகள்
பெருமை பெற்றே
பெயரோடு திரிய
கண்ணும் இமையும்
கன்னமும் கழுத்தும்
காதும் காலும்
இதழும் குழலும்
பல்லும் விரலும்
நகமும் நாபியும்
சதையும் சருமமும்
தனமும் இடையும்..
இத்தனை இருக்கையில்
இடைக்கு கீழே
தொடையின் இடுக்கேன்
இருட்டடிப்பானது
ரசமோ விரசமோ
ரசிப்பவர் கண்ணிலே
காமமோ மோகமோ
போகமோ சோகமோ
வேதனையோ சோதனையோ
காணாத இடமோ
பேதமேன் பிரிவேன்
பேசப்படாததேன்
விழித்துக்கொண்டது பெண்ணினம்
வீறு கொண்டது மெல்லினம்
பிறந்தது எழுச்சி
பாடலில் புரட்சி
வெளிப்படை உணர்ச்சி
கவிதையின் மலர்ச்சி
No comments:
Post a Comment