Monday, October 12, 2015

ஆரணங்கே

IndiBlogger - The Indian Blogger Community முட்ட வரும் ரெட்டை திமிலை மோகித்து
வட்டமிட்டு பார்வையாலதை சுகித்து
இனக்கவர்ச்சியோடு அயராது எதிர்நீச்சலடித்து
ஆத்தா நகை வித்து கற்க அனுப்பிய
அப்பன் கனவை கடலில் கரைத்து
தொடையை பிடிக்கும் ஜீன்ஸாய்
தான் மாறலாகாதா என்று ஏங்கி
நடையல்ல நாடகம் நடப்பதென்று
மெளனமாய் வாய்க்குள் விசிலடித்து
மனசுக்குள் மஜாவாய் மார்க் போட்டு
வகை வகையாய் விருந்துண்ண
எச்சூறி காத்திருக்கும் விடலைகளை
ஏமாற்ற விரும்பாத இளகிய மனசோடு
சிட்டுக்கள் படபடத்து காத்திருக்க
செய் ஏதாவது செய் என்றழைக்க
ஆணுக்கு ஆணே விரோதியாய்
ஆணை பிறக்கலாமோ அடக்கலாமோ
கங்கை குடத்துக்குள் அடங்கலாமோ
கோபுர கலசங்கள் மறைக்கலாமோ
தரிசன பரவசம் மறுக்கலாமோ
கல்லூரிகள் சிறைச்சாலைகளாவது
அநீதி அதுவோர் பெண்ணடிமை மரபு
விலங்குகள் உடைத்திடு ஆரணங்கே
ஆராதிக்க காத்திருக்கு உலக அரங்கே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community