பூப்பூவாய் ஓடுகிறாய்
புதைந்து புதைந்து தேடுகிறாய்
ரீங்கரித்து பாடுகிறாய்
ஏங்கியேங்கி நாடுகிறாய்
பூங்காவனங்களிலே
புல்வெளிகளிலே
புதர்களிலே
பொய்கைகளிலே
விதவிதமாய் ருசித்தாய்
விருந்துண்டு கிடந்தாய்
மருந்தொன்று வேண்டாமல்
மயக்கமும் தீராமல்
போதையிருந்தது
பித்தம் பிடித்தது
சித்தம் கலைந்தது
வித்தை கசந்தது
களைத்தாய்
இளைத்தாய்
திகைத்தாய்
விழித்தாயா
மன வண்டே!
உண்ட தேனிலே
உன்மத்தம் கொண்டாய்!
உன்னதம் கண்டாயா?
பகட்டான வாழ்விலே
திகட்டாத மதுவுண்டோ?
பசியும் ருசியும் வேண்டாத
பேரின்பம் இருக்கிறதா?
புதைந்து புதைந்து தேடுகிறாய்
ரீங்கரித்து பாடுகிறாய்
ஏங்கியேங்கி நாடுகிறாய்
பூங்காவனங்களிலே
புல்வெளிகளிலே
புதர்களிலே
பொய்கைகளிலே
விதவிதமாய் ருசித்தாய்
விருந்துண்டு கிடந்தாய்
மருந்தொன்று வேண்டாமல்
மயக்கமும் தீராமல்
போதையிருந்தது
பித்தம் பிடித்தது
சித்தம் கலைந்தது
வித்தை கசந்தது
களைத்தாய்
இளைத்தாய்
திகைத்தாய்
விழித்தாயா
மன வண்டே!
உண்ட தேனிலே
உன்மத்தம் கொண்டாய்!
உன்னதம் கண்டாயா?
பகட்டான வாழ்விலே
திகட்டாத மதுவுண்டோ?
பசியும் ருசியும் வேண்டாத
பேரின்பம் இருக்கிறதா?
No comments:
Post a Comment