Monday, October 12, 2015

புதிய ஓராண்டில்

IndiBlogger - The Indian Blogger Community இன்னும் இன்னும் ஆசைகள் 
இனிக்க இனிக்க நினைவுகள் 
மணக்க மணக்க விருந்துகள் 
அணைக்க அணைக்க உறவுகள் 
தொடரத் தொடர நட்புகள் 
சிரித்துச் சிரித்து நெருக்கங்கள் 
செதுக்கிச் செதுக்கி சிந்தனைகள் 
அரும்ப அரும்ப அதிசயங்கள் 
பழகப் பழக ஆழங்கள் 
மலர மலர புதுமைகள் 
புதுசு புதுசாய் ஆர்வங்கள் 
அரிய அரிய வாய்ப்புகள் 
அறிய அறிய அனுபவங்கள் 
விரிய விரிய வானங்கள் 
வளர வளர சிகரங்கள் 
சிறுகச் சிறுக துவக்கங்கள் 
பெருகப் பெருக ஆனந்தங்கள் 
மேலும் மேலும் சாதனைகள் 
எத்தனை எத்தனை வினாக்கள் 
வியக்க வியக்க விடைகள் 
மாறி மாறி விழாக்கள் 
குளிரக் குளிர உணர்வுகள் 
சின்னச் சின்ன சிலிர்ப்புகள் 
பெரிய பெரிய பாடங்கள் 

புரட்டப் புரட்ட தாள்களில் 
புத்தம் புதிய ஓராண்டில் 
புலர்ந்த பொன்னான காலையில் 
மீதி முன்னூத்தி சொச்ச நாட்களில் 
பொத்தி வைத்த பொக்கிஷங்கள் 
பெறப்போகும் பாக்கியங்கள் 
எண்ணி எண்ணி மகிழுவோம் 
எல்லோரையும் வாழ்த்துவோம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community