Friday, October 30, 2015
Thursday, October 29, 2015
Wednesday, October 28, 2015
Thursday, October 15, 2015
தோழி
என் பிரியமான தோழியே
விபரம் தெரிந்த வயதிலே
அறிமுகம் னவளே
இன்று வரை என் முகம்
பார்த்து நேசிப்பவளே
மையிட்டு பொட்டு வைத்து
அணிமணிகள் பூட்டிக் கொண்டு
தலை நிறைய பூவை சூட்டிய
அலங்காரம் ரசிப்பவளே
என் வளர்ச்சியை மலர்ச்சியை
பார்த்து பூரித்துப் போனவளே
என் கடைக்கண்ணில்
ஒளிந்திருக்கும் கள்ளச்சிரிப்பை
கண்டு மகிழ்ந்திடுவாயே
கண்ணுக்கடியில் கருவளையம்
கரிசனமாய் கவனிப்பாயே
சட்டென்று முகவாட்டத்தை
எண்ணங்களின் ஓட்டத்தை
கண்களில் எழும் கனவுகளை
இதழோரம் பூக்கும் முறுவலை
கோபத்தில் கன்றிப் போனதை
கண நேரத்தில் கணித்திடுவாயே
கனிவாய் துணையாய் நிற்பாயே
அந்தரங்கமாய் நான் கொட்டும்
குதூகலங்களை குமுறல்களை
குலுங்காமல் தாங்குவாயே
காதோரம் முதல் நரை கண்டு
நான் கலவரம் மிகக் கொண்டு
துக்கித்து நின்றபோது
துடுக்காக கேலி பேசி
தடுத்தாட்கொண்டவளே
தனை உணர வைத்தவளே
உனைப் போல் உண்மையான
நம்பகமான நட்பு நிறைந்த
உறுதுணை வேறறியேனே
சம்சார சலசலப்பை உன்னோடு
பகிர்ந்து கொண்டபோதும்
பாதித்த அத்தனை அனுபவமும்
பாடம் போல் ஒப்பித்தபோதும்
உலகம் அழகாய் தோன்றியபோதும்
ஊரும் உறவும் வெறுப்பேற்றியபோதும்
பருவத்தோடு பக்குவமாய் வளர்ந்து
நுரை அடங்கி நிதானம் வந்தபோதும்
நெஞ்சத்து எல்லைகள் “நானை” தாண்டி
வானத்துப் பறவையாய் எழும்பிய போதும்
வாய் திறவாது வாழ்த்தியவளே
தோள் கொடுக்கும் தோழியே
தாயே குருவே மனசாட்சியே
கண்கண்ட மெளன சாட்சியே
என் உள்ளக்கிடக்கையை உருவத்தை
உள்ளபடி பிரதிபலிக்கின்றாய்
பாதரசம் பூசிய பளிங்கே
போற்றுவேன் உனை எப்போதுமே
விபரம் தெரிந்த வயதிலே
அறிமுகம் னவளே
இன்று வரை என் முகம்
பார்த்து நேசிப்பவளே
மையிட்டு பொட்டு வைத்து
அணிமணிகள் பூட்டிக் கொண்டு
தலை நிறைய பூவை சூட்டிய
அலங்காரம் ரசிப்பவளே
என் வளர்ச்சியை மலர்ச்சியை
பார்த்து பூரித்துப் போனவளே
என் கடைக்கண்ணில்
ஒளிந்திருக்கும் கள்ளச்சிரிப்பை
கண்டு மகிழ்ந்திடுவாயே
கண்ணுக்கடியில் கருவளையம்
கரிசனமாய் கவனிப்பாயே
சட்டென்று முகவாட்டத்தை
எண்ணங்களின் ஓட்டத்தை
கண்களில் எழும் கனவுகளை
இதழோரம் பூக்கும் முறுவலை
கோபத்தில் கன்றிப் போனதை
கண நேரத்தில் கணித்திடுவாயே
கனிவாய் துணையாய் நிற்பாயே
அந்தரங்கமாய் நான் கொட்டும்
குதூகலங்களை குமுறல்களை
குலுங்காமல் தாங்குவாயே
காதோரம் முதல் நரை கண்டு
நான் கலவரம் மிகக் கொண்டு
துக்கித்து நின்றபோது
துடுக்காக கேலி பேசி
தடுத்தாட்கொண்டவளே
தனை உணர வைத்தவளே
உனைப் போல் உண்மையான
நம்பகமான நட்பு நிறைந்த
உறுதுணை வேறறியேனே
சம்சார சலசலப்பை உன்னோடு
பகிர்ந்து கொண்டபோதும்
பாதித்த அத்தனை அனுபவமும்
பாடம் போல் ஒப்பித்தபோதும்
உலகம் அழகாய் தோன்றியபோதும்
ஊரும் உறவும் வெறுப்பேற்றியபோதும்
பருவத்தோடு பக்குவமாய் வளர்ந்து
நுரை அடங்கி நிதானம் வந்தபோதும்
நெஞ்சத்து எல்லைகள் “நானை” தாண்டி
வானத்துப் பறவையாய் எழும்பிய போதும்
வாய் திறவாது வாழ்த்தியவளே
தோள் கொடுக்கும் தோழியே
தாயே குருவே மனசாட்சியே
கண்கண்ட மெளன சாட்சியே
என் உள்ளக்கிடக்கையை உருவத்தை
உள்ளபடி பிரதிபலிக்கின்றாய்
பாதரசம் பூசிய பளிங்கே
போற்றுவேன் உனை எப்போதுமே
Wednesday, October 14, 2015
Tuesday, October 13, 2015
காத்திருக்க வேண்டுமன்றோ
காத்திருக்க வேண்டுமன்றோ
விதை வெடித்து முளைப்பதற்கும்
குவிந்த மொட்டு மலர்வதற்கும்
குறித்து வைத்த நேரமுண்டு, கணக்குத் தவறாது-
காத்திருக்க வேண்டுமன்றோ!
புதிதாய் பொரித்த குஞ்சதுவும்
கண் திறக்க காலமுண்டு,
பூஞ்சிறகு வளர்ந்திடவும், நீலவானில் பறந்திடவும்
காத்திருக்க வேண்டுமன்றோ!
கல்லூரியாம் வாலிபச்சோலையிலே
எழுத்தில் வடிக்காத பாடமும் உண்டு,
என்றாலும் ஏட்டில் படித்ததற்கு பட்டம் பெற
காத்திருக்க வேண்டுமன்றோ!
பெற்ற பட்டம், தகுதி, திறனுடனே
பொருளீட்டி பயணம் துவங்க
பொருத்தமான வேலையொன்று கிடைத்திடவே
காத்திருக்க வேண்டுமன்றோ!
கன்னியரும், காளையரும் கண்ணால்
காதல் மொழி பேசி, கற்பனை
சிறகினிலே பறந்தாலும், தாலி தரும் காவலுக்கு
காத்திருக்க வேண்டுமன்றோ!
உயிருக்குள் உயிர் வளர்த்து
கரு தாங்கி கண் விழிக்கும் அன்னையும்
தன் மகவின் தங்க முகம் பார்க்க
காத்திருக்க வேண்டுமன்றோ!
பாலுக்கு, பேப்பருக்கு, பஸ்ஸுக்கு,
ரேஷனுக்கு, பென்ஷனுக்கு, காஸுக்கு-
வாழ்கின்ற நாளெல்லாம் வருந்தி வருந்தி
காத்திருக்க வேண்டுமன்றோ!
மேற்கே அடைவான் சூரியன்;
நீண்டு நெடிதாய் மாறிடும் நிழல்கள்.
கடமை முடித்த நிம்மதிக்கும், காலனுக்கும்
காத்திருக்க வேண்டுமன்றோ!
களம் வேறு பெண்ணே
அங்கம் மறைத்து அழகை குறைத்து,
ஆணைப் போலே ஆடை அணிந்து,
ஒசிந்த நடையை ஒரங்கட்டி,
தயங்கும் பாவனை தனையும் மாற்றி,
மென்மை களைந்து விறைப்பை புனைந்து,
சுயமாய் நின்று முனைப்புடன் முயன்று,
அறிவுத்திறன் அனைத்தும் காட்டி,
உயர்ந்த ஊதியம் தனையே ஈட்டி,
சாதனை சிகரம் சடுதியில் எட்டி-
உன்மத்த போட்டியின் முடிவிலே
ஆணுக்கு இணையாய் ஆகிவிட்டாயா,
இருமாந்து நிற்கும் புதிய பெண்ணே?
அச்சம், நாணம் போன்றவை மறந்து,
ஈவு, இரக்கம், நளினம் குறைந்து,
கடின இனமாய்-ஆணாய்- மாறி,
பெண்மை தகைமை இழந்ததன்றி
பேறென பெரிதாய் பெற்றதென்ன?
வேறென உன் களமென்றறியாமல்
வீம்பில் வீணாய் விரயமானாய்.
வீரமுண்டு, வெற்றியுண்டு,
தாயே உனக்கு தனியிடமுண்டு.
தன்மை இழந்து போகாதே,
தனை மறந்து தணலில் வெந்து
தப்பான இலக்கை தேடாதே,
உன்னோடு
அமுதத்தை அறிந்தபின்னே
அருந்துவேனோ அமிலத்தை
பித்தம் பிடித்தது எனக்கு
பிடித்தம் இருக்கு உனக்கு
சித்தம் சிலிர்த்துத் போகுது
சிதறாமல் உண்ணச் சொல்லுது
அடங்காத ஆர்ப்பரிப்பிது
அடக்காத ஆவேசமிது
விலங்காய் மாறாமல்
விலங்கை மாட்டாமல்
விருந்தை முடிக்காமல்
வருவேன் நான் உன்னோடு
தருவேன் மீதி பிறவிகளை
தருவாய் உன் ஆயுட்களை
அருந்துவேனோ அமிலத்தை
பித்தம் பிடித்தது எனக்கு
பிடித்தம் இருக்கு உனக்கு
சித்தம் சிலிர்த்துத் போகுது
சிதறாமல் உண்ணச் சொல்லுது
அடங்காத ஆர்ப்பரிப்பிது
அடக்காத ஆவேசமிது
விலங்காய் மாறாமல்
விலங்கை மாட்டாமல்
விருந்தை முடிக்காமல்
வருவேன் நான் உன்னோடு
தருவேன் மீதி பிறவிகளை
தருவாய் உன் ஆயுட்களை
துணுக்கு
தூறலாய் சாரலாய் இதுவும்
மண்வாசனையாய் இதமாய்
மனசுக்கு சுகமாய் இருக்கும்
நகைச்சுவை என்ற பெயரிலே
தீங்கில்லா ஒரு சுவை அது
பகிர்ந்திட ஒரு நல்ல துணுக்கு
எடுத்துச் சென்ற புத்தகத்தை
நூலகத்தில் கொடுக்க வந்தான்
கோபம் கொண்டு கத்தினான்
எத்தனை கதாபாத்திரங்கள்
இல்லை கதையென்று ஒன்று
வெறும் பெயர்களே முழுதுமே
அமைதியாக வினவினார்
நூலக அலுவலர் கிறுக்கனிடம்
டெலிஃபோன் டைரக்டரியை
எடுத்துச் சென்றது நீதானா
மண்வாசனையாய் இதமாய்
மனசுக்கு சுகமாய் இருக்கும்
நகைச்சுவை என்ற பெயரிலே
தீங்கில்லா ஒரு சுவை அது
பகிர்ந்திட ஒரு நல்ல துணுக்கு
எடுத்துச் சென்ற புத்தகத்தை
நூலகத்தில் கொடுக்க வந்தான்
கோபம் கொண்டு கத்தினான்
எத்தனை கதாபாத்திரங்கள்
இல்லை கதையென்று ஒன்று
வெறும் பெயர்களே முழுதுமே
அமைதியாக வினவினார்
நூலக அலுவலர் கிறுக்கனிடம்
டெலிஃபோன் டைரக்டரியை
எடுத்துச் சென்றது நீதானா
புலன் வென்று
பங்கேற்க பொது நியமங்கள்
பல மதங்களில் உண்டிங்கு
விரதமிருப்பது அதிலொன்று
வயிறு நிறைய விருந்துண்டு
வருந்துகின்ற உடலுறுப்புகள்
ஓய்வெடுக்க வாய்ப்பல்லவோ
ஊனுக்குள் உய்யும் உயிர்
புதுப்பிக்கும் யுக்தியல்லவோ
சிலிர்த்தெழும் தருணமல்லவோ
முக்கடல் சூழ் குமரிமுனையில்
பாறையொன்றின் மீதமர்ந்து
முழுதாய் மூன்று நாட்கள்
நீரும் ஆகாரமுமின்றி
விவேகானந்தர் விரதமிருந்து
சிகாகோ சென்றடைந்து
சிங்கமென கர்சித்த உரை
உலகெலாம் கேட்டதுவே
புலன் வழி சென்று வீழ்வதும்
புலன் வென்று சாதிப்பதும்
சரித்திரம் புகட்டும் பாடந்தானே
பல மதங்களில் உண்டிங்கு
விரதமிருப்பது அதிலொன்று
வயிறு நிறைய விருந்துண்டு
வருந்துகின்ற உடலுறுப்புகள்
ஓய்வெடுக்க வாய்ப்பல்லவோ
ஊனுக்குள் உய்யும் உயிர்
புதுப்பிக்கும் யுக்தியல்லவோ
சிலிர்த்தெழும் தருணமல்லவோ
முக்கடல் சூழ் குமரிமுனையில்
பாறையொன்றின் மீதமர்ந்து
முழுதாய் மூன்று நாட்கள்
நீரும் ஆகாரமுமின்றி
விவேகானந்தர் விரதமிருந்து
சிகாகோ சென்றடைந்து
சிங்கமென கர்சித்த உரை
உலகெலாம் கேட்டதுவே
புலன் வழி சென்று வீழ்வதும்
புலன் வென்று சாதிப்பதும்
சரித்திரம் புகட்டும் பாடந்தானே
பாரதம்
கதம்பம் நம் பாரதம்
நீண்டதோர் பூச்சரம்
வடக்கேயிருந்து தெற்கே
வருவாரே யாத்திரையாக
குமரிமுனை அடைந்து
கும்மாளமாய் முக்கடல்
கூடி ஆரவாரம் செய்யும்
கோலகல காட்சியை கண்டு
பாரத தேசம் முடியும் இடம்
இது என்பார் தீர்மானமாய்
இல்லை என்பார் எமதருமை
தீந்தமிழர் திரும்பி நின்று பார்
தேசம் துவங்குகிறதிங்கென்று
என்னே எம் இறும்பூது இது
நீண்டதோர் பூச்சரம்
வடக்கேயிருந்து தெற்கே
வருவாரே யாத்திரையாக
குமரிமுனை அடைந்து
கும்மாளமாய் முக்கடல்
கூடி ஆரவாரம் செய்யும்
கோலகல காட்சியை கண்டு
பாரத தேசம் முடியும் இடம்
இது என்பார் தீர்மானமாய்
இல்லை என்பார் எமதருமை
தீந்தமிழர் திரும்பி நின்று பார்
தேசம் துவங்குகிறதிங்கென்று
என்னே எம் இறும்பூது இது
விடலாமோ
கிடைத்தால் விடலாமோ
வெள்ளத்தோடு நீந்தி வரும்
வெள்ளி மீன்களைப் போல
வாழ்வில் வரும் வாய்ப்புகளை
நழுவிச் செல்ல விடலாமோ
தக்க தருணத்தில் செயல்படு
சந்தர்ப்பம் திரும்ப வாராது
சிக்கென பிடித்திடு சிக்கியதை
மண்ணை குழைத்தால் பானை
கல்லை செதுக்கினால் சிலை
சிரமம் பாராத உழைப்பில்
சிந்திய வேர்வையில்
சிந்தனைச் சிறப்பினில்
சமைத்திட்ட விதியினில்
சிங்காரம் துலங்குமே
அலங்காரம் ஆகுமே
வெள்ளத்தோடு நீந்தி வரும்
வெள்ளி மீன்களைப் போல
வாழ்வில் வரும் வாய்ப்புகளை
நழுவிச் செல்ல விடலாமோ
தக்க தருணத்தில் செயல்படு
சந்தர்ப்பம் திரும்ப வாராது
சிக்கென பிடித்திடு சிக்கியதை
மண்ணை குழைத்தால் பானை
கல்லை செதுக்கினால் சிலை
சிரமம் பாராத உழைப்பில்
சிந்திய வேர்வையில்
சிந்தனைச் சிறப்பினில்
சமைத்திட்ட விதியினில்
சிங்காரம் துலங்குமே
அலங்காரம் ஆகுமே
சொல்வேன்
சொல்வேன் நான் நடந்து வந்த பாதையில்
புல்லுக்குள் சிரித்திருக்கும் சின்னப் பூக்கள்
பரவசப்படுத்திய சிறு பறவை குரல்கள்
காதுக்குள்ளே ரீங்கரிக்கும் மூதுரைகள்
அதிசயமான அசாதாரண நிகழ்வுகள்
அன்றாட வாழ்வின் சாதாரண அழகுகள்
முள் தோலுக்குள் இனிய பலாச்சுளைகள்
கருங்கல்லுக்குள் ஊறிடும் ஈரச்சுனைகள்
முன்னோர் பதித்துச் சென்ற சுவடுகள்
மூத்தோர் சொல்லிச் சென்ற முறைகள்
என்னை நானாக்கிய ஆயிரம் சிற்பிகள்
கொஞ்சம் கொஞ்சமாய் சொல்வேன்
இதுவரை சொல்லிவந்தது போலவே
கேட்க இத்தனை பேர் இருப்பதனால்
புல்லுக்குள் சிரித்திருக்கும் சின்னப் பூக்கள்
பரவசப்படுத்திய சிறு பறவை குரல்கள்
காதுக்குள்ளே ரீங்கரிக்கும் மூதுரைகள்
அதிசயமான அசாதாரண நிகழ்வுகள்
அன்றாட வாழ்வின் சாதாரண அழகுகள்
முள் தோலுக்குள் இனிய பலாச்சுளைகள்
கருங்கல்லுக்குள் ஊறிடும் ஈரச்சுனைகள்
முன்னோர் பதித்துச் சென்ற சுவடுகள்
மூத்தோர் சொல்லிச் சென்ற முறைகள்
என்னை நானாக்கிய ஆயிரம் சிற்பிகள்
கொஞ்சம் கொஞ்சமாய் சொல்வேன்
இதுவரை சொல்லிவந்தது போலவே
கேட்க இத்தனை பேர் இருப்பதனால்
எதுவோ
தானோ அதுவோ எதுவோ
பொதுவோ தேடவோ
பாலுக்குள் பதுங்குகிறது
தயிருக்குள் தடமில்லை
வெண்ணெயாய் வெளிப்படும்
நெய்யாய் உருகி மணக்கும்
கண்ணாமூச்சி ஆடிடும்
அனலில் தங்கமெனை இடும்
பனியாய் மலரெனை தொடும்
அடித்தால் நான் அழுவேன்
அணைத்தால் சிரித்திடுவேன்
பிள்ளையை கிள்ளிவிட்டு
தொட்டிலை ஆட்டிவிடும்
பொல்லாத திட்டமேனோ
பிரபஞ்சமே பெரிய சக்தியே
பேரன்பின் பெருவெளியே
ஆக்கத்தின் பெருங்கடலே
உன்னுள் துள்ளும் மீன் நானே
பொதுவோ தேடவோ
பாலுக்குள் பதுங்குகிறது
தயிருக்குள் தடமில்லை
வெண்ணெயாய் வெளிப்படும்
நெய்யாய் உருகி மணக்கும்
கண்ணாமூச்சி ஆடிடும்
அனலில் தங்கமெனை இடும்
பனியாய் மலரெனை தொடும்
அடித்தால் நான் அழுவேன்
அணைத்தால் சிரித்திடுவேன்
பிள்ளையை கிள்ளிவிட்டு
தொட்டிலை ஆட்டிவிடும்
பொல்லாத திட்டமேனோ
பிரபஞ்சமே பெரிய சக்தியே
பேரன்பின் பெருவெளியே
ஆக்கத்தின் பெருங்கடலே
உன்னுள் துள்ளும் மீன் நானே
உடம்பு
சீராட தாய்வீடு வந்த மகளை
வழியனுப்ப விமான நிலையத்தில்
கண்ணாடித்தடுப்புக்கப்பால்
கையசைக்க காத்திருக்கையில்
தாண்டிச் சென்றனர் சீருடையில்
தளிர் மேனி தழுவிய சேலையில்
ஒயிலான பொம்மைகள் போல்
விமானப் பணிப் பெண்கள் சிலர்
கண்ட நொடியில் வியந்தேன்
இயற்கையாய் வளர்ந்த வடிவிதுவா
செயற்கையாய் செதுக்கிய வடிவல்லவா
ஏனோ நினைவுக்கு வந்தது
என்றோ வள்ளுவன் வர்ணித்தது
"என்பு தோல் போர்த்திய உடம்பு"
வழியனுப்ப விமான நிலையத்தில்
கண்ணாடித்தடுப்புக்கப்பால்
கையசைக்க காத்திருக்கையில்
தாண்டிச் சென்றனர் சீருடையில்
தளிர் மேனி தழுவிய சேலையில்
ஒயிலான பொம்மைகள் போல்
விமானப் பணிப் பெண்கள் சிலர்
கண்ட நொடியில் வியந்தேன்
இயற்கையாய் வளர்ந்த வடிவிதுவா
செயற்கையாய் செதுக்கிய வடிவல்லவா
ஏனோ நினைவுக்கு வந்தது
என்றோ வள்ளுவன் வர்ணித்தது
"என்பு தோல் போர்த்திய உடம்பு"
ஒரு நாளை
வருடத்தில் ஒரு நாளை
கொண்டாடிக் கொள்வோமோ
மொத்தமாய் மீதி நாளை
தாரை வார்த்திடவோ
தரணியில் ஆடவர்க்கே
உரிமைக்குரல் உயர்த்தவும்
உயர்வை எண்ணி பூரிக்கவும்
கூட்டம் கூட்டி களிக்கவும்
பேட்டி அளித்து முழங்கவும்
சாதனை பட்டியல் வாசிக்கவும்
எட்டிய சிகரம் விளக்கவும்
இன்னும் கனவுகள் விரியவும்
ஒரு நாள் ஒதுக்குதல் அநீதி
வருடம் முழுதும் விழித்திரு
மணம் வீசி முகிழ்த்திரு
மறக்கவிடாதே மற்ற நாளில்
மாதர் தம் மகிமைகளை
மடமையில் மங்கிடாத
மாபெரும் மாண்பினை
மறந்துவிடாதே தினமும் மலர
மங்கையே மாசறு மணியே
மணம் குன்றாத மகிழம்பூவே
மானிட சொர்க்கத்தின் மையமே
கொண்டாடிக் கொள்வோமோ
மொத்தமாய் மீதி நாளை
தாரை வார்த்திடவோ
தரணியில் ஆடவர்க்கே
உரிமைக்குரல் உயர்த்தவும்
உயர்வை எண்ணி பூரிக்கவும்
கூட்டம் கூட்டி களிக்கவும்
பேட்டி அளித்து முழங்கவும்
சாதனை பட்டியல் வாசிக்கவும்
எட்டிய சிகரம் விளக்கவும்
இன்னும் கனவுகள் விரியவும்
ஒரு நாள் ஒதுக்குதல் அநீதி
வருடம் முழுதும் விழித்திரு
மணம் வீசி முகிழ்த்திரு
மறக்கவிடாதே மற்ற நாளில்
மாதர் தம் மகிமைகளை
மடமையில் மங்கிடாத
மாபெரும் மாண்பினை
மறந்துவிடாதே தினமும் மலர
மங்கையே மாசறு மணியே
மணம் குன்றாத மகிழம்பூவே
மானிட சொர்க்கத்தின் மையமே
இல்லத்தரசன்
அடியே என் கண்ணாட்டி
கடியாரம் ஓடுதடி
நேரந்தான் ஆகுதடி
மெதுவாக எழுந்திரடி
இந்தா காப்பித் தண்ணி
சூடா குடிச்சிரு தாயி
குளிச்சிபுட்டு வந்துவிடு
முந்திரியும் மிளகும் மினுக்க
வெண்பொங்கலும் உனக்காக
மல்லியப்பூ இட்டிலியும்
கொத்தமல்லி சட்டினியும்
பூரியும் கிழங்கும் கூட
மேசையிலே வச்சிருக்கேன்
பரிமாற காத்திருக்கேன்
பிள்ளைகள குளிப்பாட்டி
உடுத்திவிட்டு உண்ணவச்சி
மத்தியான உணவு கட்டி
புத்தகப்பையோட பள்ளிக்கு
அனுப்பி வச்ச கையோட
கழுவிக் கவுத்தி முடிச்சிருவேன்
பெருக்கித் துடச்சி வச்சிருவேன்
துவச்சிக் காய போட்டுப்புட்டு
சின்னத் தூக்கம் போடுவேன்
சிற்றுண்டி செஞ்ச பின்னே
பள்ளி விட்டு வந்ததுகளுக்கு
மூக்கு சிந்தி முகம் கழுவி
பாடம் சொல்லிக் கொடுத்து
கூட விளையாடி கதை சொல்லி
படுக்க வச்சி போர்த்திப்புட்டு
கொட்டாவிகள விட்டபடி
தொலைகாட்சி பாத்துக்கிட்டு
நீ வரும் வழி மேல விழி வச்சி
காத்துத்தான் கிடப்பேனே
களச்சிப் போயி வருவாயே
உன் விரல் நீவி விட்டபடி
ஆசையா பேசி அசதி போக்கி
உணவூட்டி உறங்க வைப்பேன்
மாடா உழச்சி ஓடா தேஞ்சி நீ
கட்டு கட்டா கொண்டு வந்து
குடும்பத்தோட கும்பி குளிர
கஞ்சி ஊத்தி காப்பாத்துற
உன் கை பிடிச்ச பாக்கியசாலி
கரண்டி பிடிச்ச கணவன் நான்
நிழலில் வாடாம நானிருக்க
நிதமும் வதங்குற வனிதைய
வாதையின்றி வச்சிருப்பேனே
அந்நிம்மதியில் உறங்குவேன்
அதிகாலைல எந்திரிக்கணுங்கற
ஒத்த நெனப்போடதானே
தூங்கா நகரம்
தூங்கா நகரம் இதுவே
நீங்கா இன்பம் தருவது
பகலோ இரவோ அறியாது
பாட்டு தொடர்ந்து கேட்டிட
பட்டி மன்றங்கள் நடத்திட
பழங்கதைகள் பகிர்ந்திட
பதில்கள் பலவும் பெற்றிட
பொழுதை நன்கு போக்கிட
சொற்சிலம்பம் ரசித்திட
கருத்து வாட்கள் உரசிட
பொறிகள் பறந்து சிதறிட
மத்தாப்பூ மழை சிந்திட
தினமும் தீபாவளியிங்கு
ஏறிச் செல்லுமிப் படிக்கல்
கூராக்கும் சாணைக்கல்
கனவுகள் ஆடும் மேடை
குப்பைகள் குவியும் கூடை
உறக்கம் மறந்த நாட்களும்
உற்சாகம் மிகும் ஆட்களும்
வளர்பிறை போல் காணுதே
தொடர்கதையாய் ஆனதே
தூண்டில் இதிலே சிக்கியே
துடிக்கும் மீன்கள் கோடியே
ஒட்டிக்கொண்ட தொல்லையோ
விடுதலைதான் இல்லையோ
தொடர்புகளின் எல்லையோ
மணக்கும் பூக்கொல்லையோ
மதுவுண்ணும் வண்டானோம்
மயங்கிக் கிடக்கின்றோம்
நீங்கா இன்பம் தருவது
பகலோ இரவோ அறியாது
பாட்டு தொடர்ந்து கேட்டிட
பட்டி மன்றங்கள் நடத்திட
பழங்கதைகள் பகிர்ந்திட
பதில்கள் பலவும் பெற்றிட
பொழுதை நன்கு போக்கிட
சொற்சிலம்பம் ரசித்திட
கருத்து வாட்கள் உரசிட
பொறிகள் பறந்து சிதறிட
மத்தாப்பூ மழை சிந்திட
தினமும் தீபாவளியிங்கு
ஏறிச் செல்லுமிப் படிக்கல்
கூராக்கும் சாணைக்கல்
கனவுகள் ஆடும் மேடை
குப்பைகள் குவியும் கூடை
உறக்கம் மறந்த நாட்களும்
உற்சாகம் மிகும் ஆட்களும்
வளர்பிறை போல் காணுதே
தொடர்கதையாய் ஆனதே
தூண்டில் இதிலே சிக்கியே
துடிக்கும் மீன்கள் கோடியே
ஒட்டிக்கொண்ட தொல்லையோ
விடுதலைதான் இல்லையோ
தொடர்புகளின் எல்லையோ
மணக்கும் பூக்கொல்லையோ
மதுவுண்ணும் வண்டானோம்
மயங்கிக் கிடக்கின்றோம்
ஒப்பீடு
எண்ணங்களை வண்ணங்களாக்கி
வார்த்தைகளால் வரைந்த ஓவியம்
ஒலியும் ஒயிலும் மிளிரும் காவியம்
கனிவான காதலின் அரங்கேற்றம்
கூடவே நடந்து வரும் கண்ணியம்
ஒப்பிலா வையமாகும் இன்பமயம்
தீட்டுவது காமத்தின் கைகளெனில்
நீக்கமற நிறைந்திருக்கும் விகாரம்
கண்ணும் கருத்தும் சேர்ந்து கூசும்
நாராசமாய் விரசம் மட்டும் பேசும்
களங்கமில்லா கற்பனையே பரவசம்
கொச்சை மொழியோர் பொய் வேசம்
செம்மையாய் செதுக்கிய நல்வைரம்
எப்பக்கம் திருப்பினும் ஒளி வீசும்
செப்பனிடா மனங்களின் வரிகளில்
அசிங்கம்தானே தளும்பி நிற்கும்
ஆழத்து முத்தென அமர காவியம்
ஆற்றில் மிதக்கும் சக்கை மீதம்
சாரமுள்ள வாழ்வில் நிலைக்கும் ருசி
அவசரமான காலம் தீர்த்திடாது பசி
ஆழ்ந்த அனுபவமோ செதுக்கும் உளி
பகுத்தறியா இச்சைகள் வெறும் வெறி
உள்ளத்து உணர்வோ உற்சாக ஊற்று
கட்டாத காமமோ அழிக்கும் காற்று
சித்திரம்
இனிய மாலை வேளையிலே
அருகிலிருக்கும் பூங்காவிலே
காலாற நடந்துவிட்டு
ஆங்கமர்ந்து காற்று வாங்கி
அமைதியில் திளைக்கையில்
கண்ணெதிரே ஓர் காட்சி
வரைந்த வண்ணச்சித்திரமாய்
விரிந்த விசித்திரமென்னே
ஆவலாய் கருத்தை இழுத்து
ஆர்வமாய் கவனம் கவர
பிறந்தது ஓர் பிரமிப்பு
எனக்குள் பெரும் வியப்பு
அங்கே புல்வெளியில்
ஓர் நடுத்தர வயது தம்பதி
உட்கார்ந்திருந்தனரே
கைகளை பின்னால் ஊன்றி
இரு கால்களை நீட்டி
ஆடவன் அமர்ந்திருக்க
அவன் முகம் பார்த்தபடி
பக்கவாட்டில் திரும்பி
அமர்ந்தபடி அவள்
மிகையில்லா ஒப்பனை
பாங்கான பட்டுச்சேலை
பளிச்சென்ற தோற்றம்
முறுவல் பூத்த முகம்
ஏதோ கதைக்கிறாள்
கனிவாய் கேட்கிறான்
கலையாத கவனமும்
மாறாத புன்னகையுமாய்
தவம் போல் மௌனம்
முழுதான அங்கீகாரம்
பேசுகிறாள் பேசுகிறாள்
பேசிக்கொண்டேயிருக்கிறாள்
விழிகளை விரித்து
விரல்களை அசைத்து
அபிநயம் பிடித்து
அனுபவித்து பேசுகிறாள்
என்னதான் பெருங்கதையோ
சிறுமியாய் கன்னியாய்
வளர்ந்த நாட்களோ
கைப்பிடித்து வந்த பின்
கண்டுவிட்ட புதுமைகளோ
பக்கத்து வீட்டு சங்கதியோ
உள்வீட்டு விவகாரமோ
பிறந்த வீட்டு பெருமைகளோ
புக்ககத்து புகார்களோ
கற்பனை முத்துக்களோ
எதிர்காலத் திட்டங்களோ
உலகத்து நடப்புகளோ
தொலைக்காட்சி தொடர்கள்
தாக்கத்தில் விமர்சனங்களோ
என்னதான் பேசினாள்
எட்ட இருந்த என் காதுக்கு
எட்டவில்லை அவள் குரல்
இதமான காற்று வெளியிலே
அவன் அமைதி அழகு
ஆமோதிக்கும் ரசனையில்
அனுசரணை தெரிந்தது
இயல்பான இசைவிருந்தது
பஞ்சு போல் மனதையாக்கும்
இன்பமான தருணங்கள்
அரிய அன்னியோன்யங்கள்
அவசியமான பொழுதுகள்
தாம்பத்ய இலக்கணங்கள்
விளக்கும் அக்கணங்கள்
மௌனத்தால் ஊக்கியவன்
மனமறிந்த மணவாளன்
மனம் திறந்த மணவாட்டி
அவளா பாரதி கண்ணம்மா
ஆம் புதுமைப் பெண்ணம்மா
உயிர் கலந்த தோழியம்மா
தோளமர்ந்த கிளியம்மா
தொய்வில்லா வாழ்வம்மா
கண் நிறைந்த காட்சியம்மா
அற்பமாய் அடித்துக் கொண்டு
குரோதத்தில் குமைந்து
விரோதங்கள் வளர்த்து
உறவு நலன் சிதைத்து
உருக்குலையும் குடும்பங்கள்
சின்னத்திரையில் மட்டுமே
என்னைச் சுற்றிய உலகத்தில்
சிங்கார சங்கீதம் இசைக்கிறது
கேட்டு மகிழ்வதென் பாக்கியம்
நாடகம்
நுனிப்புல் அழுதது அழகாய்
இரவின் பிரிவில் வருந்தமாய்
ஆற்ற நினைத்தது ஆதவன்
கரம் நீட்டியது ஆதரவாய்
கண்ணீர் துடைத்திடவே
இரவிற்காக காத்திருக்க
வந்தது வேறொரு இரவு
எதிர்பாரா விரைவுடனே
பசு ஒன்று மேய்ந்ததிலே
பகல் கனவு முடிந்தது
ஆசைகள் தொடரும் பாரிலே
ஆண்டவன் விரும்பும் வரையிலே
இதை புரிந்தும் புரியாமலுமாய்
மீதமிருக்கும் புல் இரவிற்காக
அழுகிறது விடிகாலையிலே
ஒத்தை மாடு வந்திடலாம்
மந்தையாய் வந்தும் மேயலாம்
மேய்ப்பவன் மனம் போனபடி
திரையோ மூடி மூடி விலகும்
தினமும் நாடகம் தொடரும்
இரவின் பிரிவில் வருந்தமாய்
ஆற்ற நினைத்தது ஆதவன்
கரம் நீட்டியது ஆதரவாய்
கண்ணீர் துடைத்திடவே
இரவிற்காக காத்திருக்க
வந்தது வேறொரு இரவு
எதிர்பாரா விரைவுடனே
பசு ஒன்று மேய்ந்ததிலே
பகல் கனவு முடிந்தது
ஆசைகள் தொடரும் பாரிலே
ஆண்டவன் விரும்பும் வரையிலே
இதை புரிந்தும் புரியாமலுமாய்
மீதமிருக்கும் புல் இரவிற்காக
அழுகிறது விடிகாலையிலே
ஒத்தை மாடு வந்திடலாம்
மந்தையாய் வந்தும் மேயலாம்
மேய்ப்பவன் மனம் போனபடி
திரையோ மூடி மூடி விலகும்
தினமும் நாடகம் தொடரும்
பெண்ணே
ஆதி சிவன் அன்றே தந்தான்
பாதி உடம்பை பாரியாளுக்கு
மீதியையும் அவளே ஆண்டாள்
நீதி கேட்ட ஆண்களில்லை
வாடிக்கை மறந்த நாட்களிலே
வேடிக்கை நடக்குது நாட்டிலே
கொடி பிடிக்கும் காட்சியின்று
பிடித்திட மூன்றிலொரு பங்கை
தோள் கொடுக்க வேண்டுந்தான்
தோளுக்கு மாற்றிட வேண்டுமோ
தானும் வலியவள் ஆனவள்தான்
தான் மட்டுமாய் நின்றிடலாமோ
மனைவியாய் நடந்து பழக நாளாகுமாம்
தாயாகிட ஆலோசனை செய்யணுமாம்
தானாய் மொட்டு மலரும் தயங்காமல்
பெண்ணாய் வாழக் கல்வி இருக்குதோ
மீன் குஞ்சு நீந்தக் கற்பதில்லை
பெண்மை குணங்கள் இயல்பாகுமே
சொன்ன மொழியில் ஐயம் பிறக்குது
என்ன நடக்குதின்று உலகினிலே
அடையாளம் தொலைத்த அகதிகளாய்
இடை சிறுத்தவர் இன்றிருக்கும் நிலை
நடை உடை பாவனை மாறியது கண்கூடு
கிடைத்த வெற்றியோ ஒரு வெறுங்கூடு
எதை எண்ணி எழுச்சி கொண்டாய் பெண்ணே
அதை அடைய எத்தனை இழந்தாய் கண்ணே
கதை இல்லை நீ இல்லாது மாசறு பொன்னே
இதை நீ உணராவிடில் மடிந்திடும் மண்ணே
கனவுகள்
கனவுடன் பரிச்சயம் பிறந்த உடனே
நரி விரட்டுதென்பார்கள் கிழவிகள்
கள்ளமில்லா வயதில் கண்கள் விரிய
கதை சொல்வர் கண்ட பீதி கனவுகளை
புரியத் துவங்கும் வயதில் விழிகளில்
ஏற்றுவர் கனவுகளை விழித்துக் கொண்டே
பருவ வயதில் பல வண்ணக் கனவுகள்
பட்ட பிறகு மிச்சம் கொஞ்சம் கனவுகள்
பளபளப்புக் குறைந்து திரும்பிப் பார்க்க
அசை போட்டு மகிழும் சங்கதிகள்
அப்பட்டமாய் தெளிந்த நனவுகள்
இன்னும் இருக்கு ஆசை நினைவுகள்
Monday, October 12, 2015
முரண்கள்
தான் என்ற ஒன்று
தரணியில் இன்று
காற்றாய் சென்று
நிறையும் என்று
எதிர்பார்த்ததன்று
நீ ஆணி
நான் சுத்தியல்
என் அடிதான்
உன் தலைக்கு
மோட்சம்
நீ செருப்பு
நான் கால்
எனக்காக தேய்
பிறந்த பயனை
அடைவாய்
இப்படித்தான் நடந்தது
மூளைச்சலவை
சத்தமில்லை
சங்கடமில்லை
வண்டி ஓடியது
ஆணின் வேதம்
உடைக்கும் பூதம்
அடுக்குது வாதம்
போடுது கோஷம்
கலையுது வேஷம்
மருந்துக்கு உண்டு
விளைவென்று ஒன்று
பக்கவிளைவு ஒன்று
புரட்சிக்கும் உண்டு
இவ்விளைவிரண்டு
தாய்மைச் சுடர்கள்
காவியத்தொடர்கள்
தரமான வைரங்கள்
தாரமான நெருப்புகள்
ஈரமான நெஞ்சங்கள்
சுதந்திர பறவைகள்
அபூர்வ சிந்தாமணிகள்
அல்லி ராணிகள்
மதியா வேதாளங்கள்
புதிய பூபாளங்கள்
கள்ளமில்லா மொட்டுக்கள்
களம் வெல்லும் சிட்டுக்கள்
கலையின் மாடங்கள்
இலக்கிய ஓடங்கள்
இனிக்கும் பாடங்கள்
திறந்த தொந்திகள்
அரிதார மந்திகள்
அறுசுவை பந்திகள்
கலியுக குந்திகள்
பண்பின் அந்திகள்
திறந்த மேடைகள்
திரண்ட தேனடைகள்
ராணி தேனீக்கள்
கூர் கொடுக்குகள்
அடிமை ஆணீக்கள்
விதைத்தது திணை
விளைந்தது வினை
தொடுக்குது கணை
சொல்லுது நினை
உண்மைதனை
தோட்டக்காரா
கைகட்டி நிற்பாயா
களை எடுப்பாயா
பயிர் வளர்ப்பாயா
பலன் பெறுவாயா
புதுமை
சொல்லத்தான் வேண்டும் ஆராய்ச்சி இருகூர் கத்தியென்று
ஆர்வத்தில் பேரறிவில் கண்டுபிடிப்பு தரும் போதையில்
என்னென்னவோ கண்டு பிடித்தார் அவரே பின் நொந்தார்
வெடியை கொடுத்து வினையை உருவாக்கியவர் பெயரில்
பரிசு ஒரு பரிகாரந்தானோ மனதசாட்சியின் உறுத்தலோ
அணுவை பிளந்தவரறிவாரோ பேரழிவு ஆயுதங்கள் வருமென
பிணி தீர்க்கத்தான் என்று இன்னும் தொடருது பல ஆராய்ச்சி
பலாபலன்கள் பாதகமாய் இருக்க நிறையவே சாத்தியக்கூறு
ஏன் எதற்கு எப்படி என்று கேட்கச் சொன்னவனுக்கு விஷம்
பகுத்தறிவை தூண்டியதால் மடமை இருள் அகல விடிந்தது
விவகாரமான சமூக பழக்கங்கள் போட்ட கொட்டம் முடிந்தது
மாட்டுத்தொழுவினில் கட்டும் பிராணியல்ல பெண்ணென்றான்
மேய அனுப்பிவிட்டானா புரிந்துகொள்ளாமல் போனாரே
ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை காண்
நடையிலே உடையிலே நாகரிக போக்கிலே
சரி நிகர் சமானமாய் சேர்ந்து பாடம் படிக்கிறாள்
ஒன்றாய் அமர்ந்து அலுவலகத்தில் பணி புரிகிறாள்
ஊரடங்கிய பின்னும் உழைக்க அனுமதி உண்டின்று
புகை ஊத பழகிவிட்டாள் மது அருந்த தயக்கமில்லை
தோளில் கைபோட்டு தோழமை கொண்டாடுகிறாள்
இடுப்பை அணைத்தால் இம்சையாய் இல்லை
இழுத்த இழுப்பிற்கு மறுக்காமல் இசைகிறாள்
கண் போன போக்கில் மனம் போவதும் தடம் பிறழ்வதும்
ஆணின் தனி உரிமையென்று யார் சட்டம் போட்டது
வானமே இவள் எல்லை போடும் தடைகள் பொடிபடுமே
குடும்பத்தளை அறுத்தவள் தனிக்காட்டு ராணியிவள்
ஒப்பற்ற ஒளியாய் உதித்தவள் நால்வகை சேனையொடு
கோலோச்சப் பிறந்தவள் கருப்பையை பணயம் வைத்தாள்
பொய்மானை விரட்டும் பந்தயத்தில் பித்தாய் ஓடுகிறாள்
பூவுலகை காரிருள் கருநாகம் கவ்விட காத்திருக்குதே
கிரகணங்கள் விலகாது போகாது என்பதே ஆறுதல்
Subscribe to:
Posts (Atom)