Thursday, February 19, 2015

இயல்பாய்

IndiBlogger - The Indian Blogger Community தெளிந்தேன் பௌதீக ரசாயன 
இன்ன பிற விஞ்ஞான விதிகள் 
இவையெவுதுமில்லா விந்தைகள்
எல்லாமே உரைக்கும் உண்மையை
விளங்குதல் விரும்புதல் வெளிப்படுத்தல்
வினையாற்றல் வாதிடுதல் வழிமுறைகள்
அனைத்தும் எதிர்மறை திசையில்
அன்று முதல் இன்று வரையில்
ஆணுக்கும் பெண்ணுக்கும் வழக்கம்
சீரான தீராத இடைவெளி இருக்கும்
ஒரு போதும் இணையாத பயணம்
இருப்புப்பாதை சொல்லும் தத்துவம்
இயல்பாய் வண்டி அதிலே செல்லும்
புரிந்தவர்க்கில்லை பிணக்கும் வழக்கும்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community