Thursday, February 19, 2015

விவேகம்

IndiBlogger - The Indian Blogger Community ஆம் நீதான் முடிவெடுக்க வேண்டும்
உனக்கொரு துன்பம் உடலில் நோவு
ஆ என அலறி ஊரை கூட்டுவாயா
இவ்வலி யாருக்கும் வந்ததுண்டோ
புலம்பி பலத்தை போக்குவாயோ
போதாத காலத்தை நோவாயோ
பல்லைக் கடித்து பொறுப்பாயோ
போய்விடும் இதுவும் கடந்து என
தைரியமாய் வலி தாங்குவாயோ
பொறுப்பாய் விதியை சுமப்பாயோ
வலியை வாங்கிக்கொள்ள முடியுமோ
வருந்தும் சுற்றம் மேலும் வருந்தவோ
விவேகம் கண்டு வியந்து உருகவோ
விரைந்து நீ முடிவு செய்ய வேண்டாமோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community