தெளிந்தேன் பௌதீக ரசாயன
இன்ன பிற விஞ்ஞான விதிகள் இவையெவுதுமில்லா விந்தைகள்எல்லாமே உரைக்கும் உண்மையைவிளங்குதல் விரும்புதல் வெளிப்படுத்தல்வினையாற்றல் வாதிடுதல் வழிமுறைகள்அனைத்தும் எதிர்மறை திசையில்அன்று முதல் இன்று வரையில்ஆணுக்கும் பெண்ணுக்கும் வழக்கம்சீரான தீராத இடைவெளி இருக்கும்ஒரு போதும் இணையாத பயணம்இருப்புப்பாதை சொல்லும் தத்துவம்இயல்பாய் வண்டி அதிலே செல்லும்புரிந்தவர்க்கில்லை பிணக்கும் வழக்கும்
செல்லாத்தா பழகின பாதையில
சொல்லாத்தா பழைய பொன்மொழிநில்லாத்தா நிலையா ஒழுக்கத்துலநல்லாத்தான் இருக்கும் உலகம்
ஆம் என்கிறாள் நெஞ்சழுத்தமாய்
எடுத்தாயா பணத்தை என்றதற்குசட்டைப் பையில் எடுத்தது முன்புவங்கியில் ஏடிஎம்மில் பிற்பாடுவீட்டிலிருந்தே எண்ணை அழுத்திஇணைய சந்தையில் வாங்க இன்று
தான் தன் சுகம்
தாரக மந்திரம்சுயநல இயக்கம்சுருங்கிய உலகம்
மனிதர்கள் மட்டுமே
மாற்றம் விரும்புவதுபுது உணவு ருசித்திடபுது இடம் வசித்திடபுது பொழுதுபோக்குபுதுப் புது ஆராய்ச்சிபொல்லாத ஜீவராசிதிருப்தியில்லா ஜாதி
வருகின்ற போது வரட்டும்
திருமணமும் விலக்கும்பதவியும் உயர்வும்பிறப்பும் இறப்பும்தடுத்தால் நிற்காதுஅழைத்தால் வாராதுஉழைத்தால் போதும்உறங்கு நிம்மதியாய்
கனவு வரும் தூக்கத்தில்
கலைந்துவிடும் பகலில்பகலில் காணும் கனவுதூங்கவிடாது செலுத்தும்
வெளியே குளிருது
உள்ளே வேர்க்குதுகேள்வி கேட்குதுபுதிய பெண்ணினம்புரட்சி நடத்துதுகூடு கலையுதுபார்த்து கலங்குதுபடர்ந்த ஆலமரம்
என்னிடம் இல்லை ஏக்கம்
குறையவில்லை ஊக்கம்நன்மை செய்தல் நோக்கம்ஆர்வம் காணாது தேக்கம்விரும்பும் ஆழ்ந்த தாக்கம்நடக்குமதிலேன் சந்தேகம்
பாராய் பாரில் பல முன்னேற்றம்
பவுசான அதிசயம் பல்லாயிரம்நொடியில் வரும் தொடர்ப்பின்றுநோயை வென்று நீண்ட ஆயுள்சொகுசும் சுகமும் அணைக்குதுஅறிவின் ஆட்சிமைதனை தாண்டிஅழியாமல் ஆடுது ஆதிவாசியின்ஆண்குறி காட்டுமிராண்டித்தனம்
பெண்ணே வளரும் பெண்ணே
தேவையுனக்கு நான்கு கண்ணேபள்ளங்கள் பார்த்திடு முன்னேஆபத்துக்கள் தொடருது பின்னேபிச்சியென்றடைக்கும் காப்பகம்கற்பும் கிட்னியும் திருட மருந்தகம்தூங்கும் போதும் நீ விழித்திருஏழாம் அறிவுடன் செழித்திரு
கண்டீர் பல வித்தை
கயிற்றின் மேல் நடந்துஅந்தரத்தில் ஊஞ்சலாடிநுனி விரலில் தாங்கிசர்க்கஸ்தான் சம்சாரம்சாதனைதான் எத்தனை
“சொல்லுங்க” என்று ஒரு முனையில்
"அப்புறம்" என்று மறுமுனையில்எத்தனை தரம் அதையே சொல்லிடசெல்லிடைப் பேசியில் கடலை போடவெட்டியாய் வறுபடும் ஓர் தலைமுறைவிரயம் காலம் பொருள் வாலிப சக்தி
காணோம் பண்பாட்டை
பழகும் பாங்கைபொதுநல பொறுப்பைபணிவான நாகரிகத்தைபெண்மை போற்றும் பெருமையான ஆண்மையைபொருள் வேட்டையில்மாக்களாய் மாறுபவர்க்குமேன்மையில்லா மூடர்க்குபுத்தி புகட்டுவார் யாரோ
இளமையது தானே என்றும் இருக்கும்
தளர்ந்து மூன்று காலால் நடந்தாலும் உலர்ந்து பல்லும் சொல்லும் போனாலும்மனதால் வாழலாம் மார்க்கண்டேயனாய்
பிரமை நிறைந்த கண்கள்
குழந்தைப் பருவ நாட்கள்நடுவில் பல வருடங்கள்தெளிவான உண்மைகள்மறுபடியும் மயக்கங்கள்அவை அந்திம காலங்கள்
கூடும் உடலில் துன்பம்
வாதம் பித்தம் கபம்வினை தவறான விகிதம்நில் கவனி அது உசிதம்
நன்றாய் நடந்தது
நன்றாய் நடக்கிறதுநன்றாய் நடக்கும்நன்றுரைத்தது கீதை
அடிபெண்ணே ஆதங்கமேன்
உலகை எழுப்பும் சேவல்அகங்காரம் அதன் கூவல்பெட்டை நீயிடுவாய் முட்டைபொறுமையாய் காப்பாய் அடைஇனத்தை காக்கும் உன் குணம்அதற்கு துப்பில்லா ஆணினம்அதனோடு ஏன் வீண் மோதல்
உணர்வாய் உறங்கும் உன் பலம்
அனுமன் தோளை சிலிர்த்தால்சிரஞ்சீவியும் சுமையல்லவேகையில் உள்ளது வெண்ணெய்
நம்பிக்கையுடன் நகரும் வண்டி
ஒரு காலத்தில் ராக்கெட் வேகம்இன்றோ அதற்கு நத்தை சுபாவம்நகர்கிறதுதானே பாதை தவறாமல்தொடரட்டும் இந்த வண்டிப்பயணம்ஆனந்த நிலையம் அடையும் வரை
பெருகுமன்றோ ஆனந்தம்
பேராசை இங்கு அனர்த்தம்சின்ன சின்ன ஆசைகள்திகட்டாத தேன் துளிகள்
அம்மானை ஆடி
ஆலவட்டம் சுத்திகிளித்தட்டு தாவிகண்ணாமூச்சியில்களித்த காலத்திலேகண்ட சொர்க்கம்விரல் நுனி ஆடும்ஆட்டத்தில் இருக்குதா
நிற்கும் என நினைத்த இடத்தில் நிற்கவில்லை ஊர்தி
விற்கும் என நினைத்த கடையில் விற்கவில்லை வடைநினைப்பது நடக்காமல் போனால் மிஞ்சும் ஏமாற்றம்நினைக்காமல் நடக்கும் பல அதிசயங்கள் யதார்த்தம்
முடிந்தது ஆகிறது முடியாதது
முதுமையின் ஆதிக்கமாகிறதுபிடித்தது ஆகிறது பிடிக்காததுபித்தும் பிடிவாதமும் கூடுதுபயணம் நெடுகிலும் தடைகள்போராட்டம் மட்டும் தொடருது
எப்போ வருமென
ஏங்கி தவித்துவாடி வதங்கிவருந்திய பின்னேவந்த மழையும்விடாது பெய்யவிடிய விடிய கொட்டஅதுவும் வருத்தமேபொல்லா மனக்குறைகூட வரும் நிழலோ
ஆணவம்தான் வேறென்ன
உண்மை உரைக்க பயமென்னசெவிட்டு பாவனை காட்டிதன் பாதையில் பிசகாதுஅப்பாவியாய் ஒரு முகம்அமுக்கமாய் தன் குறியில்குவித்த முழு முனைப்புமௌனமாய் சாதனைஆணுக்கு வெறும் சத்தம்பெண்ணுக்கு பல ஆயுதம்
போய்விட்டார் பயந்து பணிந்த பாவையர்
தொழுவில் கட்டிய பசுக்கள் இங்கில்லைவெருட்டி விழித்து விவாகரதத்தென்று வீராப்பாய் மீசை முறுக்கினால் இன்றுஆஹா எவ்வளவு எனக்கு ஜீவனாம்சம்விட்டு விடுதலையாகி பறப்பாளே பூவை
மறைந்திருந்தது என்ன
அறிவாயா ஆண்மகனேபிறந்த வீட்டை மாற்றிபின்னுள்ள பெயரை மாற்றிவாரிசுகளை பெற்றெடுத்துகொடியுடை தொலைத்துசுய விருப்பங்கள் மறந்துபழைய நட்புகள் துறந்துபம்பரமாய் என்றும் சுழன்றுபளிச்சென பொழுதும் நின்றுநட்ட இடத்தில் தழைத்துஅல்லும் பகலும் உழைத்துஅலுப்பும் களைப்பும் மறைத்துபழகிய பல செலவை குறைத்துஉன் வீட்டை துலங்க வைக்கும்உன்னவளின் உள்ளத்தின் உள்ளேஉள்ளது வெறும் சின்ன ஆசைகள்அன்பான ஒரு வார்த்தை போதும்ஆதரவாய் அரவணைப்பே தேவைஅறிவாய் பெண்ணின் பெருமைபோற்றுவாய் அவள் அருமை
யாராம் வெல்வது
சக்தியா சிவனாசிவனென்பது கதைநம்புபவன் பேதை
ஆம் என்றால் ஆமாம்தானா
இல்லையென்றால் இல்லைதானாவஞ்சியரின் வார்த்தையிலேஅர்த்தமும் அகராதியும் வேறென்ற விபரமறிவான்அனுபவசாலி ஆண்பிள்ளை
நானறியேன் உலகம் செல்லும் திசை
சிறு வயதில் படித்தேன் பூகோளத்தில்கிழக்கே ஜப்பானில் நாள் பிறக்கிறதுமெதுவாய் மேற்கும் கண் திறக்கிறதுகடிந்து விரையும் நவீன வான ஊர்திகள்விரலால் நொடியில் தொலைதொடர்புகள்கிழக்கு மேற்கு பார்க்கவேண்டாம்தெற்கு வடக்கு தெரியவேண்டாம்கிராமமாய் சுருங்கிய கோளமிதில்யாதும் ஊரே யாவரும் கேளிர்மெய்யானது மூத்த தமிழன் வாக்குவேகமிது கொஞ்சம் அச்சமாயிருக்கு
உன்னை சுற்றிய உலகம்
உண்மையில் ஒரு பம்பரம்உற்சாகமாய் அது சுற்றும்சாட்டை கயிறுன் சுற்றம்
வார்த்தை கொட்டும் அருவியாய்
வண்ணங்கள் அதில் மிளிரும்தடையில்லா அக்காட்டாற்றில்உருண்டு வரும் கற்பனைகள்திகட்டாத தூய கற்கண்டுகள்மொழியின் எண்ணற்ற அழகுகள்வழங்கும் அரிய பெரிய வரகவிகள்என் மனம் கவர்ந்த தெய்வங்கள்
நீரே பகுத்தறிய வேண்டும்
நேரே மேலே கீழே உள்ளேபரந்த மனதுடன் பார்ப்பீர்யானை தடவிய குருடன்ஓர் அரைகுறை அறிவாளிதேவை நமக்கு முழுமதி
தெரியுமே தெள்ளத்தெளிவாய்
சமுதாயத்தின் மேடுபள்ளங்கள்அலமாரி நிறைக்கும் சேலைகள்இரண்டாம் முறை உடுத்த அலுப்பவைமாற்றுத் துணியில்லா அபலைகள்ஜனநாயகத்தின் கொடிய அவலங்கள்
சென்றுவிட்டாள் வேறகம்
வென்றுவிட்டாள் புது களம்விம்மி புடைக்கும் தாய் மனம்சுகமாய் சோகமாய் ஒரு கனம்
அனுபவம் இருக்காம் பெருசுகளுக்கு
முடி இல்லாதவனுக்கெதுக்கு சீப்புபல் போனவனுக்கெதுக்கு பக்கோடாதான் பிடித்த முயலுக்கு மூணு கால்அப்படித்தான் செய்வேன் போடாயதார்த்தம் புரியாத தலைமுறைஅனுசரனையில்லா பிடிவாதம்அகண்ட உலகமிதில் இக்காலத்தில்அணுவளவும் உதவாத அனுபவம்பார்த்து அனுபவிப்பவர்தான் பாவம்
வயிற்றுக்குள்ளே பகாசுரன்
அது வளரும் பிள்ளைகட்குபசியெடுக்கா பருவமொன்றுஅதன் பேர்தான் வயோதிகம்
இக்காலத்தில் சொர்க்கத்தின் சாயல்
கடிகாரமும் நாட்காட்டியும் பாராமல்உறங்க விழித்திருக்க தோன்றாமல்அவசரமும் அவதியும் இல்லாமல்தன சின்ன வட்டத்தை தாண்டாமல்நீடிக்கட்டும் ஒய்வு காலம் கசக்காமல்
நற்செய்தி மாறும் வயதிற்கேற்ப
பள்ளிக்கு விடுமுறை பால்யத்தில்காதலும் கல்யாணமும் வாலிபத்தில்பதவி உயர்வும் பணமும் நாற்பதுகளில்சுப காரியங்கள் ஒய்வு பெறுமுன்மூன்றாம் தலைமுறை அறுபதுகளில்படுத்தாத தேக நிலை எழுபதுகளில்மன நிறைவாய் உறங்கிய முடிவுரை
எனக்காகத்தான் இங்கு எதுவும் மாறுமோ
கிழக்கன்றி மேற்கில் சூரியன் உதிக்குமோஅலைகளும் கடலில் ஓய்ந்து நிற்குமோஆற்றலேயில்லா அப்பாவியும் நானோமாறாத நியதிகளை இயற்கை விதிகளைமதித்து ஒதுங்கி முரண்படாதிருப்பேனேமாற்ற முடிந்த என் சூழலை அழகாக்கிமாந்தர் தம் வாழ்வில் மேம்பட உதவிமானிடப்பிறவியின் பலனை துய்ப்பதேமகத்தான மதமும் மார்க்கமுமென்பேனே
வண்டு தான் காட்டும் சமத்துவம்
உண்டோ அதற்கு நிற பேதம்தேடித் தேடி தேனை உண்ணும்பரப்பும் பூமி எங்கும் மகரந்தம்ஓயாத உழைப்பதன் ரீங்காரம்சேவைகெடுத்த ஒரு அவதாரம்
மனதுள் மணக்குது
மதுரை மருக்கொழுந்துமல்லிகை பூச்செண்டுமருதாணி மனோரஞ்சிதம்பவளமல்லி பாரிஜாதம்ஜாதிமல்லி செண்பகம்முகரத் திகட்டா கதம்பம்பொத்தி வைத்த பொக்கிஷம்மலரும் நினைவுகள் தரும்பள்ளி மாணவர் சந்திப்பு
போனதாம் பொற்காலம்
பெருசுகளின் புலம்பல்புரியவில்லை புது கருவிகள்பிடிக்கவில்லை புது அலைகள்பழசை பற்றிக்கொண்டு புதியவற்றை வசை பாடிபடுவது அதிகமாபடுத்துவது அதிகமா