Wednesday, May 12, 2010
நியாயமில்லா ஆணை
சொல்லுங்களேன் நியாயத்தை
கூட்டுக் குடியிருப்பின் பொது
சிமிட்டி பாதையிலே காணும்
சிவப்புக்கம்பள விரிப்பின் மேல்
மலர் தூவிய வரவேற்பொத்த
அழகிய காட்சியாய் விரியும்
றெக்கையில்லா பட்டாம்பூச்சியாய்
மெல்லிய எடையில்லா பூவிதழ்கள்
வெள்ளையும் இளம் சிகப்புமாய்
உருண்டு மிதந்து செல்வதை
அடுத்த வீட்டு பாட்டி வெறுக்கிறாள்
என்னருமை போகன்வில்லா கொடியை
வெட்டச் சொல்லி கட்டளையிடுகிறாள்
அவளது நியாயமில்லா ஆணைக்கு
அலைந்து ஆதரவு தேடுகிறாள்
ஒட்டும் உறவும் இன்றி வாழும்
ஒத்தை கிழவி அவள் நிதமும்
அக்கம் பக்கம் வம்பிழுக்கிறாள்
பொல்லா குசும்பும் செய்கிறாள்
பொறுத்துக் கொள் பொங்கிவிடாதே
என்கிறார் அன்பான என் துணைவர்
ஐயோ பாவம் என்றே தோன்றும்
மன நோய் பிறவிகள் இவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment