நிறைய உறவினர்களும் நண்பர்களும் கேட்டும் புத்தகம் பிரசுரிப்பதில் சுத்தமாய் ஆசை இல்லாமல் இருந்த எனக்கு அந்த யோகம் சமீபத்தில் தானாய் தேடி வந்தது ஒரு விந்தையான சம்பவம்! என்னுடைய தமிழ் மொழிபெயர்ப்பு ஆர்வத்தை அறிந்த எனது மாமா மகள் எனக்கு ஒரு மொழிபெயர்ப்புப் பணி கொடுத்தாள். மின்னஞ்சலில் பகுதி பகுதியாக அவள் அனுப்பிய வாசகங்களை நான் மொழிபெயர்த்து அனுப்ப அவற்றை சரிபார்த்து கோர்த்து அவள் உறுப்பினராய் இருக்கும் அமைப்பின் தலைவரான பேராசிரியரிடம்(அவர் தான் வாசகங்களை எழுதியவர்) கொடுக்க அவரும் மிக்க மகிழ்ந்து பாராட்டினாராம். டிவிஎஸ் ஆதரவுடன் பிரசுரிக்கப்பட்ட இந்த சிறிய அழகிய வழுவழுப்பான தாளில் அச்சிடப்பட்ட புத்தகத்தின் பின் அட்டையின் உள் பக்கம் அவள் பெயருடன் என் பெயரையும் தமிழாக்கம் செய்தவர்கள் என்று அச்சிடச் செய்துவிட்டார். தி ஹிந்துவில் அரைப் பக்க விமர்சனம் கிடைக்கப் பெற்ற இப்புத்தகம் மாநகரின் எல்லா இடங்களிலும் -முக்கியமாய் மீனாட்சியம்மன் கோவிலுக்குள் இருக்கும் பிரசாத விற்பனை செய்யுமிடங்களில் - தாராளமாய் விற்கப்பட்டும் விநியோகப்பட்டும் கொண்ட வண்ணம் இருக்கிறது. 'Rediscover Meenakshi Amman Temple Madurai(Self-Guided Tour with Temple Map) என்ற பெயர் கொண்ட இந்த புத்தகத்தில் மீனாட்சி கோவிலின் சில முக்கிய அழகிய சிற்பங்கள் ஓவியங்களின் புகைப்படங்கள் ஆங்கில தமிழ் விளக்கங்களுடன் இருக்கின்றன. விலை ரூ.20. அச்சில் என் பெயரைப் பார்த்து என்னை விட என் மக்களுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும்தான் அதிக மகிழ்ச்சி! எனக்கு தெரிந்தவர்கள் அதை படித்து விட்டு என்னை நேரில் பாராட்டும் போது நன்றாகத்தான் இருக்கு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment