Saturday, February 16, 2013

முதலிடம்

IndiBlogger - The Indian Blogger Community பதில் தெரிந்தாகவேண்டும் இன்றெனக்கு
வாயில் கொழுக்கட்டையா ஏன் மௌனம்
ஏழடி என் பின்னே எடுத்து வந்தாய் வலம்
உன் பொல்லா சுதந்திரத்தை பறித்தேனா
போகாதே அங்கேயிங்கே என்று தடுத்தேனா
பேசாதே கண்டவனிடமும் என்றேனா
பட்டும் வைரமும் பரிசளிக்கவில்லையா
பாதுகாக்கும் பாங்கில் குறையுளதா
கொடுமையென்ன நான் செய்தேன் உனக்கு
பிள்ளைக்கு உன் மனதில் ஏனடி முதலிடம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community