Saturday, February 16, 2013

மாதர்

IndiBlogger - The Indian Blogger Community அவன் ஒரு மிகச் சாதாரண சராசரி ஆண்மகன்
பொங்கிப் போடவும் பக்கத்தில் படுத்துறங்கவும்
பெற்று வளர்க்கவும் பணிவிடைகள் செய்திடவும்
போதும் பெண்டாட்டியென்ற பொது நீதியின் பிரதிநிதி
பாதியுடலை உமைக்கீந்த புராண முன்னோடி ஈசனோ
சதியை ரதசாரதியாக்கிய சாம்ராஜ்யபதி தசரதனோ
இதிகாசத்திலோ காவியத்திலோ சரித்திரத்திலோ அரிதே
ஆயினும் சுக்கானைப் பிடித்திருப்பர் மாதர் பல வீட்டிலே 

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community