Friday, February 22, 2013

தங்கநகை

IndiBlogger - The Indian Blogger Community தங்கநகை ஏதுக்கடி என் ஆசை தங்கமே
கையாலாகா ஆம்பளையா நீ மச்சானே
திருட்டுப்பய தீங்கு செய்வான் கண்ணே
உனக்கு இந்த மீசையெதுக்கு கன்ணாளா
பெட்டிக்குள்ள பூட்டிவைக்க நகையெதுக்கு
ரசிக்கத் தெரியாதவனுக்கு இது ஒரு சாக்கு
சேதாரம் செய்கூலி ஏமாத்து வேலையிருக்கு
உருக்கி ஊதி செஞ்சி தர முடியுமா உனக்கு
உன்னோட பேசி வெல்ல முடியுமா எனக்கு
அப்போ சட்டைய மாட்டு கடைக்குக் கிளம்பு

2 comments:

  1. இதென்ன காய்கறி வியாபாரமா... சட்டையை மாட்டிட்டு கிளம்ப...

    ReplyDelete
  2. ஏலாதத கேக்க மாட்டா பொம்பள! சிறுவாடு வச்சிருப்பா; கூட்டி கழிச்சி கணக்கு பண்ணி குடும்பத்த சீரா நடத்துவா. சாப்பிட மட்டும் சம்பாத்தியமா? கொஞ்சம் அவள பவுசா வாழ விடுங்களேன்! எனக்கு தெரிஞ்சி எல்லா ஆம்பளைக்கும் தங்கம்னாலே அலர்ஜிதான்! ஒரு விஷயம் தெரிஞ்சிக்கணும்:எங்கப்பா சொல்வாரு: ஒரு சபையில பொம்பள நகைநட்டோட மின்னிகிட்டு நின்னா அது முழுக்க முழுக்க அவ ஆம்பளைக்கு பெருமை சேர்க்கும் விஷயம்! அது ஒரு அறிவுப்பு: என் புருஷன்/அப்பன் சக்தியப் பாருன்னு! இப்படி ஒரு சூட்சுமம் இருக்கு!

    ReplyDelete

IndiBlogger - The Indian Blogger Community