Thursday, February 7, 2013

சண்டிக்குதிரை

IndiBlogger - The Indian Blogger Community கற்பனையை உசுப்பிப் பார்க்கிறேன்
எழ மறுக்கிறது சண்டிக்குதிரை
தட்டித் தடவிக் கெஞ்சிக் கொஞ்சியும்
வெறுப்பில் அக்கழுதையை திட்டியும்
ஒன்றும் நடக்கவில்லை நினைத்தபடி
உலுக்கினாலும் உதிரவில்லை நெல்லிக்கனி
மழையோ அருவியோ வந்து கொட்டவில்லை
பாலையாய் மாறியதோ பாழும் புலமை
வற்றிய ஊற்றாய் கிடப்பது கொடுமை 
மீனில்லை அதை கவ்வும் கொக்கில்லை
நானென்ன செய்வேன் ஊடல் தணிக்க
தெரியும் எனக்கும் தவிப்பை மறைக்க
இனி நான் கெஞ்சமாட்டேன் மிஞ்சுவேன்
தானாய் வந்து கொஞ்சுவாய் தெரியாதா

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community