Tuesday, February 5, 2013

பொழுதுபோக்கு

IndiBlogger - The Indian Blogger Community குழந்தைகளுக்கு எளிய மனது
குதூகலிக்கத் தெரிந்த வயது
ஆயிரம் ரூபாய் பொம்மையும்
ஐந்து ரூபாய் பொம்மையும்
ஒன்றுதான் அவர் மகிழ்வதற்கு
எத்தனை விதமாய் ஒரு பொருள்
மாற்று அவதாரம் எடுக்கிறது
வட்டத்துக்குள் சுற்றும் காந்த மீன்களை 
வாளிக்குள் நீந்தவிட்டு தூண்டிலடவும்
வடிவமைத்த அழகிய பூங்காவில்
வரிசையில் நிற்க வைக்கவும் முடிகிறது
வகுத்த கட்டத்துள் அடங்கா கூர்மதி
ஊகிக்க முடியா அற்புத கற்பனைகள்
உயிர்ப்புடன் நடமாடும் பாத்திரங்கள்
அவர்கள் உலகம் பெரியது சிறந்தது
சொர்க்கத்தின் சாயலை கொண்டிருப்பது
அதிலே ஐக்கியமாய்விட முயல்வது
எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community