Thursday, February 28, 2013

Women – Burden or Backbone

IndiBlogger - The Indian Blogger Community 


Women who are the burden – the chief theme – of all immortal poetry, epics, sagas and arts are the backbone of the family, society and country. Women are a feast to the five senses and are an object of perennial interest to the sixth sense.

Don’t the girls add colour and glitter to wherever they are? Charm and power  emanate from them. They are the sustaining force in our dreary, mundane life. Their contribution as humanity’s  mainstay is immense and indispensable. Let us see how.

‘The hand that rocks the cradle rules the world’. Woman carries the future generation in her womb and guards it with proper nourishment. It is in her hands the future generation grows after it enters the world. Under her diligent care the future generation takes shape into a happy, healthy, enlightened adult.

Besides the maternal responsibility and accomplishment women have many more splendours to their credit. They have unsurpassed administrative skills. The day-to-day life runs on well-oiled wheels spreading a sense of calm and security all around.

It is a fact that there is a woman behind every successful man. Women help men in countless ways to achieve and prosper. Her uncanny judgement, accurate planning and timely persuasion have never failed to bear fruit.

Furthermore, she is an expert in making both ends meet even in the most dire situations. She juggles paise as an adept acrobat by making judicious savings with great forethought.

The power of the ‘kitchen cabinet’ can never be underestimated. Women’s shrewd calculations never go wrong. With women at the helm the family ship can navigate the roughest seas and weather the worst storms.

This being the truth what do we see and hear in reality? The Media unfolds everyday a sad tale of a desperate, ill-fated female. We seem to be living in an evil world where female foeticide, infanticide, abandoned female babes, dowry harassment and bride-burning are the order of the day.

How and when did these evils creep into our honourable society? How did people – both men and women – become selfish, stupid, short-sighted, callous criminals? Have they no idea about the havoc a drastically unbalanced sex-ratio can cause?

Just like we managed in the modern world to eradicate many diseases and illnesses let us vow to drive away these endemic vices. With a strong will and determination we shall set out to create an awareness that women are not a burden. Let us extend our full cooperation to government to enforce its judicious laws against these heinous crimes.

May the dense heads realize that a girl child is not a yoke on the neck but a special gift from God to make man stand up tall and proud! Yes, she is his backbone, definitely.


http://www.indusladies.com/forums/blogs/induslady/indusladies-4th-annual-international-women-8412/

Tuesday, February 26, 2013

Behind Domestic Violence - empathetic Solutions Needed

IndiBlogger - The Indian Blogger Community 

Behind domestic violence

Last week when the family was watching the early night news programme on the local TV channel I was shocked to hear the news reader say a software engineer hacked his wife in her office a few minutes ago. The desperado cut his own throat after doing his wife in and was battling for life.

The site of the incident, it was reported, was Sholinganallur, the hub of IT offices in Chennai, the state capital. Though my eyes were still on the TV screen what the news reader rattled on registered only partially on my mind. My imagination was racing on a separate track visualizing what could have happened before the gory incident.

What made the husband mad? Was he disappointed not to find her at home when he returned from office? Had she rang him back about her urgent work at office against his strict orders to be back home early?

Was their kid ailing and needed the mother’s care? Was he inept or impatient to be the kid’s nurse?

Or, had they planned previously to spend the evening somewhere to which her sudden assignments put a brake?

Was she habitually returning home late in spite of his dislike for it? Have they had too many fights over the matter? Was he unfair in not understanding the deadline tensions of his wife? Was she deliberately disobeying his reasonable conditions?

Was he under the effects of spirit? Was he a suspicious Othello? What was his problem? What could have led to this ghastly culmination? Who deserved more blame? Who is really guilty?

Such sensational stories are on the increase in our media. This happens in all the strata of society – from the slum-dwellers to residents of posh bungalows.

Domestic violence has many faces. Besides plain, blind rage that leads to brutal murder there are numerous modes of torture which are very cruel, nerve-chilling, soul-bruising and mind-numbing.

Men can act like wicked Machiavellians, scheming, unscrupulous sadists who love to see the lady of the house in tears. It is inexplicable but it is a misconstrued sign of mastery, I presume. The Stone Age man who broke the woman’s bones with cudgels lives on in the modern, civilized man, I fear.

It is not the uneducated alone who taunt their wives with ugly names but the so-called intellectuals are not lagging behind in hurling loathsome, foul words on their wives. These are more deadly and painful than the poisoned darts of the aborigines.

Are the men not using this technique of verbal violence too long? Yes, I think they are. Women are successfully cultivating a thick skin against this cheap, easy trick of men.

Education, emancipation, economic independence and the government’s judicious policies and laws are helpful in hardening the shells of women and they are beginning to slug on with more confidence and productivity.

In spite of the giant leaps we have taken in modern life with completely changed lifestyles, customs and concepts it is undeniable the male psychology has not budged an inch from the luxury of a bygone era: he expects a cheerful wife greeting him with hot chai and fresh samosas, a smiling wife sitting by his side watching his favourite TV programmes, a brisk wife who hushes the kids to sweet slumber, a talented wife turning into a multi-cuisine chef serving him a delicious dinner.

Men of the past generations were grooved to this one-way traffic, never for a moment thinking of changing roles once in a while and stand upon his lady as she always stood on him, her lord.

A lot can be done to hasten women’s progress and their complete liberation from domestic violence.

Charity begins at home is the saying. So does basic training in manners and culture/refinement. Inculcation of values is the proper solution to this disgusting problem. ‘Catch them young’ is what I advise. It is the duty of the parents, esp. the mother, to teach the kids to respect all human beings irrespective of sex.

It is painful to still see the vestiges of the bad custom of treating male children better than female children. Even among siblings the superiority of the male child still exists. This has to be relentlessly eradicated.

Next comes the proper understanding of the nature of both men and women – the fundamental differences in their way of reasoning, reacting, emoting and perceiving. There is cent percent truth in saying men are from Mars and women are from Venus. They are completely different as two different species. Yet they are created as complementary to each other.

With perfect understanding they can overcome all hurdles and live a meaningful, fulfilling life. How we bring up our children makes a huge difference in the amount of compatibility they are capable of acquiring in later life.

Men before tying the knot should pledge to give equal rights to his wife and strive to keep the pledge. The question of ego has no place in the husband-wife relationship.

The couple should try to solve the disagreements between them through calm discussions and reasoning-outs. Arguing upon the pros and cons is not bad but obstinate sticking to one’s views is. Each must put oneself in the other’s shoes and realize how it feels. It is only fair to do so.

When desperate seeking counseling can be more helpful, esp. in the present nuclear family scenario. In the good old days elders in the joint family acted as buffers and forestalled big storms. Their wise and kind counsel came a long way in maintaining domestic peace and decorum.

One thing that the men must understand is that it is not at all difficult to please women. Woman is not at  all a greedy wretch. Her expectations/desires are unbelievably simple! The popular belief that men must spend heaps of money on diamonds to please women is utterly untrue. Just a pat on the back, a peck on the cheek, a kind look, one word of appreciation – these will make her your willing slave.

Be generous – forgive and forget. No one is flawless. Practically no good comes out of harping on old hurts and grudges. Bury the past’s grievances and welcome each day as a new, fresh page in the novel of marital bliss.

http://www.indusladies.com/forums/entry.php?b=8412&bt=90321

Name:  Indusladies_IWD_Blog_Contest.jpg
Views: 6947
Size:  57.2 KB

பெண் பார்க்கும் படலம்

IndiBlogger - The Indian Blogger Community கறுத்துப் போன உதடுகள் சொன்னது
புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதென்று
கன்னக்கதுப்பும் தொந்தியும் காட்டியது
குடிப்பழக்கம் உறுதியாய் இருக்கிறதென்று
கண்களின் விகார கீழ் பார்வைகள் கூறியது
கண்டிப்பாய் இவன் ஒரு காமுகனென்று
பெண் பார்க்கும் படலம் ஒன்று முடிந்தது
கன்னி நிராகரித்தாள் மாப்பிள்ளையை

Saturday, February 23, 2013

என் பழக்கம்

IndiBlogger - The Indian Blogger Community மயக்கத்தில் மூழ்கிவிடும் எனது மூளை
உள்ளும் புறமும் மறந்த ஆனந்த வேளை
பிடித்த காதாசிரியரின் புத்தகம் கையில்
பள்ளி நாட்களில் வேர் விட்ட என் பழக்கம்
யானை தும்பிக்கையில் சங்கிலியென்றதை
அம்மா செல்லமாய் திட்டியது மறக்குமா

Friday, February 22, 2013

தங்கநகை

IndiBlogger - The Indian Blogger Community தங்கநகை ஏதுக்கடி என் ஆசை தங்கமே
கையாலாகா ஆம்பளையா நீ மச்சானே
திருட்டுப்பய தீங்கு செய்வான் கண்ணே
உனக்கு இந்த மீசையெதுக்கு கன்ணாளா
பெட்டிக்குள்ள பூட்டிவைக்க நகையெதுக்கு
ரசிக்கத் தெரியாதவனுக்கு இது ஒரு சாக்கு
சேதாரம் செய்கூலி ஏமாத்து வேலையிருக்கு
உருக்கி ஊதி செஞ்சி தர முடியுமா உனக்கு
உன்னோட பேசி வெல்ல முடியுமா எனக்கு
அப்போ சட்டைய மாட்டு கடைக்குக் கிளம்பு

நிலா

IndiBlogger - The Indian Blogger Community நிலா ஒரு நிகரில்லா பின்னணி
மொட்டை மாடியில் சோறுண்ண
கடற்கரையில் கூடி விளையாடிட
பஞ்சணையில் சதிபதி சரசமாடிட
பிள்ளைக்குக் கதை பல சொல்லிட
விவரிக்கவியலாத ஓர் வசியம்

காத்திரு

IndiBlogger - The Indian Blogger Community கணக்கோ பௌதிகமோ
தமிழோ ஆங்கிலமோ
வேப்பங்காயாய் கசக்கும்
பரிட்சைக்காக படிக்கையிலே
பின்னாளில் கைகொடுக்கும்
பிள்ளைகள் படிக்கும் போது
சமைக்கப் பழக பிடிக்கவில்லை
அம்மா விடாது நச்சரித்த போது
பிடித்தது பதி பாராட்டுகையில்
பழம் பழுக்க நாளாகும் காத்திரு

Thursday, February 21, 2013

இயற்கை நியதி

IndiBlogger - The Indian Blogger Community கேள்வி இருந்தால்
இருக்கும்  பதில்
பூட்டுக்கு சாவி 
ஆணுக்குப் பெண் 
உடலுக்கு உயிர்
இயற்கை நியதி

Sunday, February 17, 2013

கொஞ்சம் இடம் கொடு

IndiBlogger - The Indian Blogger Community நீயே எந்தன் உயிர் என்கிறாய்
நூதனமாய் என்னை கொல்கிறாய்
அன்புச் சிறையில் மூச்சு முட்டுதே
காற்று புகா இடைவெளி காதலா
அது என் சுதந்திரத்தின் சாதலா
எங்கு சென்றாலும் பின் தொடர்கிறாய்
என்னிடம் உனக்கு மோகமா சந்தேகமா
எனக்கே எனக்கு கொஞ்சம் இடம் கொடு

இனிப்பான தருணங்கள்

IndiBlogger - The Indian Blogger Community தெரியாது
நேரம் போவது
எவ்வெப்போது
கையில் ஒரு புத்தகம்
அருகில் காதல் துணை
திரையில் நல்ல படம்
கடற்கரைப் பொழுது
இணையத்தின் இணைப்பு
இனிப்பான தருணங்கள்
இதுபோல் எத்தனையோ

கேட்கணுமா

IndiBlogger - The Indian Blogger Community உலகம் மாறிவிட்டதா
ஆமாம் ரொம்ப
உலகம் மாறவில்லையா
இல்லை கொஞ்சம் கூட
தேர்ந்த வக்கீலிடம்
என் மனக் குரங்கிடம்
ஒரு கேள்வியை கேட்கணுமா
மாட்டிக்கிட்டு முழிக்கணுமா

Saturday, February 16, 2013

முதலிடம்

IndiBlogger - The Indian Blogger Community பதில் தெரிந்தாகவேண்டும் இன்றெனக்கு
வாயில் கொழுக்கட்டையா ஏன் மௌனம்
ஏழடி என் பின்னே எடுத்து வந்தாய் வலம்
உன் பொல்லா சுதந்திரத்தை பறித்தேனா
போகாதே அங்கேயிங்கே என்று தடுத்தேனா
பேசாதே கண்டவனிடமும் என்றேனா
பட்டும் வைரமும் பரிசளிக்கவில்லையா
பாதுகாக்கும் பாங்கில் குறையுளதா
கொடுமையென்ன நான் செய்தேன் உனக்கு
பிள்ளைக்கு உன் மனதில் ஏனடி முதலிடம்

மாதர்

IndiBlogger - The Indian Blogger Community அவன் ஒரு மிகச் சாதாரண சராசரி ஆண்மகன்
பொங்கிப் போடவும் பக்கத்தில் படுத்துறங்கவும்
பெற்று வளர்க்கவும் பணிவிடைகள் செய்திடவும்
போதும் பெண்டாட்டியென்ற பொது நீதியின் பிரதிநிதி
பாதியுடலை உமைக்கீந்த புராண முன்னோடி ஈசனோ
சதியை ரதசாரதியாக்கிய சாம்ராஜ்யபதி தசரதனோ
இதிகாசத்திலோ காவியத்திலோ சரித்திரத்திலோ அரிதே
ஆயினும் சுக்கானைப் பிடித்திருப்பர் மாதர் பல வீட்டிலே 

Friday, February 15, 2013

புரிகிறதா

IndiBlogger - The Indian Blogger Community என்னவாகும் பூமி உருண்டை
மேலும் மேலும் குப்பை
கொட்டுகிறோம் யோசிக்காமல்
மக்காததுதான் முக்கால்வாசி
இமயங்களாய் தினம் வளருது
ஆபத்தானது அணுக்கழிவு
அடுத்தவர் கரையில் கொட்டும்
பேரரசுகளின் சின்னப் புத்தி
உயிர் தாங்கும் பஞ்சபூதங்கள்
நஞ்சானதின்று நம் அறிவீனத்தால்
வரிசை கட்டி விழுங்கக் காத்திருக்கு
பெருநோய்கள் பேரிடர்கள் புரிகிறதா

Thursday, February 14, 2013

பாரம் என்னவாகும்

IndiBlogger - The Indian Blogger Community என்ன சொல்ல
எப்படிச் சொல்ல
இல்லை நெருக்கம்
நீளும் தூரம்
நடுவில் திரை
விலக்கத் தடை
கிடைத்தது சுதந்திரம்
பறிபோனது உரிமை
பொருளில்லா உறவு
போராடும் மனது
சத்தமின்றி விலகவோ
சட்டப்படி விலகவோ
இதுதான் முடிவா
இல்லறத்தின் கதியா
இனிக்காத கட்டுப்பாடு
இணங்காத எழுச்சி
எங்கே தவறினோம்
எதனால் இழந்தோம்
கரும்பான நுகத்தடி
இரும்பாக கனக்குதே
பூட்டிய மாடுகள்
தனிப்பாதை தேடினால்
வண்டி எங்கு போகும்
பாரம் என்னவாகும்

இரண்டுக்கும் இடையே

IndiBlogger - The Indian Blogger Community நனவுக்குக் கருணை உண்டோ
கடமையே கண்ணாய் நகருது
கனவுக்கு இல்லை கடிகாரம்
காலம் மறந்து கிடக்கிறது
இரண்டுக்கும் இடையே இன்புற்றிட
கால்கள் மண்ணில் ஊன்றியிருக்க 
தலையோ மேகத்தில் மிதக்கின்ற
கலையில் தேர்ச்சி கைகொடுக்கும்

Tuesday, February 12, 2013

பத்திரிக்கைச் செய்தி

IndiBlogger - The Indian Blogger Community கவிதையிலே கொஞ்சிக்கோ
காசை அள்ளி வீசிக்கோ
கவனமாய் இருந்துக்கோ
காமன் தின உற்சாகம்
கரை உடைத்துவிட்டால்
கண்ட பெண்ணிடமும்
கைவரிசை காட்டினால்
காத்திருக்கு போலீஸு
காப்பு மட்டுமில்லை பாஸ்போர்ட்
கனவுக்கும் ஆப்பாம் இது இன்று
கிடைத்த பத்திரிக்கைச் செய்தி
காலம் கடந்த பின் வருந்தாதே

Monday, February 11, 2013

பொருட்காட்சி

IndiBlogger - The Indian Blogger Community வாங்கலாம் சவ்வு மிட்டாயும் பஞ்சு மிட்டாயும்
பாப்கார்னும் டில்லி அப்பளமும் குச்சி ஐஸும்
நெத்திக்கு ஒட்டுப் பொட்டு ஜடைக்கு மாட்ட கிளிப்பு
குதூகலம் பொங்குமிடம் என்றால் பொருட்காட்சி

ஆஹா

IndiBlogger - The Indian Blogger Community நான் நீயாகி நாமாகி ஒன்றாகி
இரு கண்ணின் ஒரு பார்வையாகி
ஒரு கனவாகி ஒரு நினைவாகி
ஒரு லயத் துடிப்பாகி நிதம் வாழ்ந்து
செம்புலநீராய் தாம் நெஞ்சம் கலந்து
நம் மண்ணின் மாண்பல்லவா ஆஹா

Sunday, February 10, 2013

போயே போச்சு

IndiBlogger - The Indian Blogger Community போயே போச்சு பண்பும் பக்குவமும்
பச்சையாய் பல்லை இளிக்குது பணப்பசை
படிப்பும் பதவியும் பரம்பரை பெருமையும்
பொருளற்றுப் போகுது புல்லர்கள் முன்னால்

Saturday, February 9, 2013

மாமதுரை போற்றுவோம்

IndiBlogger - The Indian Blogger Community சிரிப்பு மல்லிப்பூவாய் கொட்டிக்கிடக்கு
ஊர் முழுக்க மூணு நா திருவிழாவுல
சுங்குடி சேலை கட்டிகிட்டு போனேன்
சவ்வு மிட்டாயிக்காரனிடம் கை நீட்டி 
கடியாரம் கட்டிகிட்டேன் கழுத்து மாலை
கூட வந்த மதினிக்கு வாங்கித் தந்து
குழந்தைகால நினைவுகளில் குதூகலித்து
கவர்னரும் கலெக்டரும் மேயரும்  மேடையிலே
காலேஜு கொமரி கொழுந்தன் மக கையில பரிசு
கண்கொள்ளா காட்சியா தத்ரூப சாட்சியா
கடந்தகால நிகழ்கால பெருமையெல்லாம்
கடந்துபோக அலங்கார ஊர்வலம் நேற்று
கடைசி நாளின்னிக்கு வைகையிலே விளக்கேற்றி
கோலாகலமா வாணவேடிக்கை நடக்கப் போகுது
பன்னெண்டு மாசமும் பஞ்சமில்லாம திருவிழா 
ஒன்னு இப்ப கூடிப்போச்சி மாமதுரை போற்றுவோம்

யோகம்

IndiBlogger - The Indian Blogger Community நிறைய உறவினர்களும் நண்பர்களும் கேட்டும் புத்தகம் பிரசுரிப்பதில் சுத்தமாய் ஆசை இல்லாமல் இருந்த எனக்கு அந்த யோகம் சமீபத்தில் தானாய் தேடி வந்தது ஒரு விந்தையான சம்பவம்! என்னுடைய தமிழ் மொழிபெயர்ப்பு ஆர்வத்தை அறிந்த எனது மாமா மகள் எனக்கு ஒரு மொழிபெயர்ப்புப் பணி கொடுத்தாள். மின்னஞ்சலில் பகுதி பகுதியாக அவள் அனுப்பிய வாசகங்களை நான் மொழிபெயர்த்து அனுப்ப அவற்றை சரிபார்த்து கோர்த்து அவள் உறுப்பினராய் இருக்கும் அமைப்பின் தலைவரான பேராசிரியரிடம்(அவர் தான் வாசகங்களை எழுதியவர்) கொடுக்க அவரும் மிக்க மகிழ்ந்து பாராட்டினாராம். டிவிஎஸ் ஆதரவுடன் பிரசுரிக்கப்பட்ட இந்த சிறிய அழகிய வழுவழுப்பான தாளில் அச்சிடப்பட்ட புத்தகத்தின் பின் அட்டையின் உள் பக்கம் அவள் பெயருடன் என் பெயரையும் தமிழாக்கம் செய்தவர்கள் என்று அச்சிடச் செய்துவிட்டார். தி ஹிந்துவில் அரைப் பக்க விமர்சனம் கிடைக்கப் பெற்ற இப்புத்தகம் மாநகரின் எல்லா இடங்களிலும் -முக்கியமாய் மீனாட்சியம்மன் கோவிலுக்குள் இருக்கும் பிரசாத விற்பனை செய்யுமிடங்களில் - தாராளமாய் விற்கப்பட்டும் விநியோகப்பட்டும் கொண்ட வண்ணம் இருக்கிறது. 'Rediscover Meenakshi Amman Temple Madurai(Self-Guided Tour with Temple Map) என்ற பெயர் கொண்ட இந்த புத்தகத்தில் மீனாட்சி கோவிலின் சில முக்கிய அழகிய சிற்பங்கள் ஓவியங்களின் புகைப்படங்கள் ஆங்கில தமிழ் விளக்கங்களுடன் இருக்கின்றன. விலை ரூ.20. அச்சில் என் பெயரைப் பார்த்து என்னை விட என் மக்களுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும்தான் அதிக மகிழ்ச்சி! எனக்கு தெரிந்தவர்கள் அதை படித்து விட்டு என்னை நேரில் பாராட்டும் போது நன்றாகத்தான் இருக்கு!

சுனாமி-பாகம் 2

IndiBlogger - The Indian Blogger Community அம்மி, உரல், திரிகல் போய் மிக்ஸி, கிரைண்டர் வந்த மாதிரி சுக்கு, மிளகு, திப்பிலி போய் மாத்திரைகள், மருந்துகள், களிம்புகள் வந்துவிட்டன. அன்று அல்லோபதி அவ்வளவாக அறியப்படாத காலகட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் அலமாரி தட்டொன்றில் எளிய மருத்துவ சாமான்கள் இருந்தன. ஜாதிக்காய், மாச்சக்காய், பேர் சொல்லாதது(சுட்ட வசம்பு) உரசி ஊட்டி வளராத குழந்தையில்லை. கையில் பூலாங்கிழங்கு கட்டி வைத்தோம், வாந்தி, மந்தம் கட்டுப்படுத்த. யாருக்கும் வாய்ப்புண் என்றால் மாச்சக்காயை உரசி தடவினோம். ஓமவல்லி செடியின் இலைகளை இருமலுக்கு மருந்தாக்கினோம். வாய் ஓயாத இருமலும் பனங்கல்கண்டுக்கு பயந்தது. அடிபட்டு ரத்தக்கட்டு, வீக்கம் என்றால் நாமக்கட்டியை அல்லது கரம்பல்(களிமண்) கட்டியை உரசி பூசினோம். ஓமமும் விரலி மஞ்சளும் தூளாக்கி சாம்பிராணியோடு சேர்த்து புகை பிடித்து தலையில் கோர்த்த நீரை வற்றச் செய்தோம். வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி லேசாக சூடு காட்டி வேனக்கட்டி மேல் வைத்து குணமாக்கினோம். நம் கையிலே எத்தனை எளிய மருந்துகள் இருந்தன. உங்கள் குடும்பத்தில் ஒவ்வாமை சரித்திரம் இருக்கிறதா அப்படியானால் நோ பூலாங்கிழங்கு, மஞ்சள் கலந்த குளியல் பொடி என்கிறார் குழந்தை வைத்திய நிபுணர். இன்று வெற்றிலை போடும் பழக்கம் இல்லை- அது புற்றுநோய் வரவழைக்குமென்று அந்த ஆரோக்கியமான பழக்கத்திற்கு தடா. இன்றும் என் மாமியார் வீட்டு அலமாரியில் வயிற்று உபாதைகளுக்கு ஒரு பாட்டிலில் சுக்குப் பொடியும் இன்னொன்றில் மங்குஸ்தான் தோல் பொடியும் இருக்கிறது. என் வீட்டு தோட்டத்தில் இன்றும் ஓமவல்லி செடி இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் இவை தொடராது. பழைய பிரியத்தில் அவற்றை பழகியவர்கள் அவற்றை வைத்திருக்கிறோம். பழைய எளிய மருந்துப் பொருட்களை கண்ணாலும் கண்டிராத இளைய தலைமுறையினர் பாவம் என்ன செய்வார்கள். எத்தனை டாக்டர்கள், ஆஸ்பத்திரிகள், சோதனைக்கூடங்கள், மருந்துக்கடைகள்! எத்தனை விளம்பரங்கள், வலி நிவாரணிகள், எத்தனை அலர்ஜி எச்சரிக்கைகள்! இந்த மாற்றம் சரிதானா, பழையதை துறந்ததில் இழந்தது என்ன என்று சிந்திப்பது அடித்துப் போட்டுவிட்ட நவீன மாற்ற சுனாமிக்குப் பின் ஒரு வியர்த்தமான வேலையென்றே தோன்றுகிறது.

சாதனை

IndiBlogger - The Indian Blogger Community கடல் கடந்து அன்று திரவியம் தேடினர்
கடினமான பாதைகளில் பயணித்தனர்
கட்டுமரத்தில் பாய்மரக்கப்பலில் தோணியில்
கடும்புயலில் காரிருளில் கொட்டும் மழையில்
குடும்பம் காக்க வம்சம் வளர போராடினர்
கலாசார பாலங்கள் கெட்டியாகக் கட்டினர் 
கொண்டு சென்றதும் கொண்டு வந்ததும்
குறைவிலா தனமும் அரிய ஞானங்களும்
குறு விரல் நுனியில் இன்று பரிவர்த்தனை
கற்பனையின் வேகத்தை மிஞ்சும் சாதனை

Friday, February 8, 2013

சுனாமி

IndiBlogger - The Indian Blogger Community பிரச்சினை அனுபவ அறிவுள்ள பெரியவர்கள் மறைவதும் அவர்கள் கலை தொடராததும் மட்டும் இல்லை! மரபணு மாற்றிய பயிர்களால் மண்ணை மலடாக்கி, செயற்கை ரசாயன உரத்தால் உடம்பை வியாதிக்கூடமாக்கி, தின்ன வேண்டியது சத்தில்லாமல் விளைவிக்கப்பட, கண்ட கண்ட கொழுப்புத் தீனிகளை பெரியவரும் சிறியவரும் கொறித்துத் தள்ள நடமாடும் மாமிச மலைகளாய் மக்கள் மாறி வர-எத்தனை உடற்பயிற்சி நாகரிகம் வளர்ந்தாலும்-தாராளமாய் கிடைக்கும் ஒரு ஈனோ பொடி பாக்கெட்டோ ஒரு டைஜீன் மாத்திரையோ இருக்க சுக்குதான் வேண்டுமென்று தொலந்துபோன சகாப்ததத்தை எண்ணிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபு. புதியன பூதங்களாய் மரபின்றி, நெறியின்றி புகுவதுதான் வேதனை!
என்ன செய்வது? காலமெனும் காட்டாற்று வெள்ளம் கரையோர வளங்களை அடித்துச் செல்லத்தான் செய்கிறது; படிந்த வண்டல் நலத்தை மட்டும் எண்ணி ஆறுதல் பட்டுக்கொள்ளவேண்டியதுதான். ஒரு மிகச் சிறந்த மதி நுட்பம் கொண்ட பாட்டியின் செல்ல பேத்தியாய் வளரும் யோகம் பெற்றவள் நான். அவர்களிடம் எண்ணற்ற எளிய மருத்துவ யுத்திகள், தீர்வுகள் இருக்கும்; அஞ்சறை பெட்டிக்குள் இருக்கும் அத்தனையும் எத்தனையோ நோவு தீர்க்கும்; சின்ன குழந்தைகள் சிறுநீர் கழிக்க முடியாமல் வீரிட்டு அலறினால் கொஞ்சம் வெதுவெதுப்பான வெந்நீரை அந்த இடத்தில் விட்டால் உடனே நிவாரணம், ஆசுவாசம். இப்பொழுது உடனே ஆஸ்பத்திரிக்கு ஓடி பல வித டெஸ்ட் பண்ணி பல வித இன்னல்களுக்கு பிறகு பணமும் ஆறாய் ஓடிய பிறகு அதே நிவாரணம் கிடைக்கும்; உயிர் பிழைக்காதென தெரிந்தும் நாட்கணக்கில் பிரக்ஞையில்லாதவரை ஐசியூவில் வைத்திருந்து கறக்க மட்டும் கறந்து உறவினரையும் சொல்லொணா துன்பத்திற்கு ஆளாக்கி- இதுவெல்லாம் நினைத்தாலே ரத்தக்கொதிப்பை வரவழைக்கும் விஷயங்கள். என் பிள்ளைகளிடம் நான் கறாராக சொல்லிவிட்டேன் - ஆசைப்பட்ட மாதிரி பொடுக்கென்று என் உயிர் போகாமல் தீவிர நிலை வர நேர்ந்தால் ஆஸ்பத்திரி மெஷினில் மட்டும் போட்டு கொல்லக்கூடாது என்று. அந்த காலத்தில் பெருசு இழுத்துக்கொண்டிருந்தால் ம்ம் பாலை விடுங்கள் என்பார்கள், விடுதலைதான்! மாறிவிட்ட நிறைய விஷயங்கள் வேப்பங்காயாய்த்தான் இருக்கிறது- இம்மாற்றங்கள் சுனாமி மாதிரி- வெறுங்கையால் அணையிட முடியாது என்ற விரக்தியில் வேதனையில் விலகி நிற்க வேண்டியதுதான். எவ்வளவு அழகாக பேறுகால பராமரிப்பை-பார்லி தண்ணி குடி, உலை நீரில் வெண்ணெய் போட்டு குடி, அப்படி படு, இப்படி எழு, பிள்ளை பெறுமுன்னும் பெற்றபின்னும் தினமும் தாம்பூலம், பிள்ளையை போஷாக்காய், புஷ்டியாய்-என் பிள்ளைகளுக்கு 'கொழுக் மொழுக்' என்று பட்டப்பெயர் உண்டு-வளர்க்க ஆயிரம் யோசனைகள் என முழுக்க முழுக்க பாட்டி அரவணைப்பில் வளர்ந்த என்னை விட யாரும் அதிகமாய் இக்கால மாறுதலுக்கு துக்கப்பட முடியாது!
சூடு படுத்திய தேங்காய் எண்ணெயை காதில் விட்டால் காது வலி போயே போச்! துரு பிடித்த ஆணி பாதத்தில் குத்திவிட்டால் எண்ணையை சூடாக்கி மிளகாய் பொடியில் குழப்பி வைத்து கட்டு போட்டால் போதும்; கண் சிவந்து நோகும் போது சில துளி பிள்ளைப்பால் விட்டால் போதும்-இப்படி கோடிக்கணக்கில் எளிய நம்பகமான வைத்தியங்கள். இவை இளந்தலைமுறையினருக்கு தெரியாது, சொன்னாலும் ஏற்காது!!! ஒரு ஸ்கான் எடுக்காமல் 3 பிள்ளை பெற்றேன், இத்தனை தடுப்பூசிகள் இல்லாமல் ஆரோக்கியமாய் அவர்களும் வளர்ந்தார்கள். இப்பொழுதுள்ள ஆரோக்கியமில்லா வாழ்கைமுறைகளில் ஊறியர்வர்களுக்கு முன்னோர்களின் ஆரோக்கியமான வழிமுறைகள் புரிவதேயில்லை. விளக்குவது வியர்த்தம். அன்றொரு நாள் முகநூலில் ஓவராக சானிடைஸ் செய்து உடல் எதிர்ப்பு சக்தியை குறைக்காதீர்கள் என்ற எச்சரிக்கை வந்தது மனதுக்கு இதமாய் இருந்தது. இந்த மாதிரி ஒன்றிண்டு குரல்கள் போதுமா? மஞ்சள் பூசி முக முடியை தவிர்த்து அழகு பேணாமல் பார்லருக்கு போய் கேடு வரவழைக்கவேண்டுமென்று முனைப்பாய் இருப்பவர்களிடம் எந்த பேச்சும் எடுபடுமா? ஆயாசமாய் இருக்கிறது.
ஆம், சுனாமி போல் மாறுதல் நம் நல்ல பாரம்பரியத்தை அழித்துவிட்டது.

சாதனை

IndiBlogger - The Indian Blogger Community காரணம் வேண்டியிருப்பதில்லை
காலை முதல் இரவு வரை
வலிய வம்புக்கிழுத்து வசை பாடி
சரிக்குச் சரி மல்லுக்கு நின்று சதிராடி
சகலமும் அறிந்த நிறைய சதிபதிக்கு
சாதனை இப்படியும் வாழ்ந்து காட்டுவது
இயற்கையிலே எதிர் துருவ காந்த ஈர்ப்பு
இல்லறத்தின் அடி நாதத்தில் ஏன் வியப்பு

பரமசுகம்

IndiBlogger - The Indian Blogger Community அன்பில் வந்ததே வில்லங்கம்
பெண்களால் வரும் விவகாரம்
பழையவளும் புதியவளும் போரிட
மிகப்புதிதாய் வந்தவள் வெல்ல
தகப்பனாய் அடையும் பாக்கியம்
இறுதி வரை கூட வரும் பரமசுகம்

Thursday, February 7, 2013

நானிருப்பேன்

IndiBlogger - The Indian Blogger Community பயமாய் இல்லை புறப்பட்டுச் செல்ல
பரணை ஒழிக்க வேண்டும் முதலில்
பாதுகாத்த திரட்டிய பொக்கிஷங்கள்
வெறும் குப்பைகள் அடுத்த தலைமுறைக்கு
நினைவு சின்னங்கள் எல்லாம் தேவையில்லை
நானிருப்பேன் அவர்கள் பாதச்சுவடுகளாய் மாறி

செல்லப் பேரனே

IndiBlogger - The Indian Blogger Community படவா எவ்வளவு குசும்பு உனக்கு
முளைத்து மூணு இலை விடலை
அதற்குள் இத்தனை விவரம் விஷமம்
என் பேச்சை ரசிக்கிறாய் தெரியுமெனக்கு
அதை கைபேசியில் இப்படி பதிவு செய்து
கீச் கீச் என மாற்றி பேச வைத்து மகிழ்ந்து 
கெக் கெக் என சிரிக்கிறாய் செல்லப் பேரனே
உன் பிரியமான தோழியாய் நான் இருப்பேனே

சண்டிக்குதிரை

IndiBlogger - The Indian Blogger Community கற்பனையை உசுப்பிப் பார்க்கிறேன்
எழ மறுக்கிறது சண்டிக்குதிரை
தட்டித் தடவிக் கெஞ்சிக் கொஞ்சியும்
வெறுப்பில் அக்கழுதையை திட்டியும்
ஒன்றும் நடக்கவில்லை நினைத்தபடி
உலுக்கினாலும் உதிரவில்லை நெல்லிக்கனி
மழையோ அருவியோ வந்து கொட்டவில்லை
பாலையாய் மாறியதோ பாழும் புலமை
வற்றிய ஊற்றாய் கிடப்பது கொடுமை 
மீனில்லை அதை கவ்வும் கொக்கில்லை
நானென்ன செய்வேன் ஊடல் தணிக்க
தெரியும் எனக்கும் தவிப்பை மறைக்க
இனி நான் கெஞ்சமாட்டேன் மிஞ்சுவேன்
தானாய் வந்து கொஞ்சுவாய் தெரியாதா

Wednesday, February 6, 2013

குழந்தை

IndiBlogger - The Indian Blogger Community காலம் நின்றுவிட்டதா ஏன் இப்படி நடக்குது
பலூன்காரனை பார்த்தால் கால்கள் நிற்கிறது
மிட்டாய் கடையைப் பார்த்தால் இனிக்கிறது
காக்கா குருவியை பட்டாம்பூச்சியை கண் தொடருது
கேட்டது உடனே வேண்டுமென அழுகத் தோணுது
ஓ என்னுள் இருக்கும் குழந்தை வளர மறுக்குது

கலை

IndiBlogger - The Indian Blogger Community பார்வையில் அழைப்பு
வார்த்தையில் தவிர்ப்பு
சாய்ந்து சாய்ந்து பார்த்து
காய்ந்து காய்ந்து போகவிட்டு
நெருங்கவும் விடாமல்
விலகவும் விடாமல்
அலைக்கழிக்கும் கலை
கன்னி விரிக்கும் வலை
காளை தவிக்கும் நிலை
களிப்பூட்டும் காம லீலை

நட்பு

IndiBlogger - The Indian Blogger Community நட்பும் கூடவா மலிந்து போகும்
முக நூலை பார்த்தால் போதும்
நட்பு வேண்டி எத்தனை கோரிக்கை
யாரென்றே தெரியாது  ஆயினும்
பொது நண்பர்கள் மூலம் அறிமுகம்
முன்பின் அறியாமல் ஏன் நெருக்கம்

Tuesday, February 5, 2013

பொழுதுபோக்கு

IndiBlogger - The Indian Blogger Community குழந்தைகளுக்கு எளிய மனது
குதூகலிக்கத் தெரிந்த வயது
ஆயிரம் ரூபாய் பொம்மையும்
ஐந்து ரூபாய் பொம்மையும்
ஒன்றுதான் அவர் மகிழ்வதற்கு
எத்தனை விதமாய் ஒரு பொருள்
மாற்று அவதாரம் எடுக்கிறது
வட்டத்துக்குள் சுற்றும் காந்த மீன்களை 
வாளிக்குள் நீந்தவிட்டு தூண்டிலடவும்
வடிவமைத்த அழகிய பூங்காவில்
வரிசையில் நிற்க வைக்கவும் முடிகிறது
வகுத்த கட்டத்துள் அடங்கா கூர்மதி
ஊகிக்க முடியா அற்புத கற்பனைகள்
உயிர்ப்புடன் நடமாடும் பாத்திரங்கள்
அவர்கள் உலகம் பெரியது சிறந்தது
சொர்க்கத்தின் சாயலை கொண்டிருப்பது
அதிலே ஐக்கியமாய்விட முயல்வது
எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு

Monday, February 4, 2013

மாமியார்

IndiBlogger - The Indian Blogger Community யாரோ வந்து யாரையோ 
அபகரிக்க அமைந்ததா
ஆயிரங்காலத்து பயிர்
வெறும் கற்பனையை வளர்த்து
வீணாய் வேதனையில் வெந்து
வம்பை வளர்க்காத மாமியார்
தன் மகனை இழக்க மாட்டாள்
இன்னொறு மகளைப் பெறுவாள்

ஆரம்பம்

IndiBlogger - The Indian Blogger Community புகையாக பனி சூழும் காலை
போர்வைக்குள் கிடக்கும் வேளை
காத்திருக்கும் காப்பியின் நினைப்பு
கண் திறவாமல் ரசிக்கும் பாட்டு
இரவின் குழப்பங்கள் விலகியிருக்க
திடீரென அரிய தீர்வுகள் பளீரிட
அடடா அது தானே ஆனந்தம்
அழகான ஓர் நாளின் ஆரம்பம்

Sunday, February 3, 2013

மாமதுரை போற்றுவோம்

IndiBlogger - The Indian Blogger Community வந்துவிட்டதப்பா பொற்காலம்
சரித்திரத்தைத் தூசி தட்டி
வீர சின்னங்கள் ஊரில் நிறுவி
புராதன சிறப்பிடங்களுக்கு உலாவாக
பள்ளிச் சிறார்களைக் கூட்டிச் சென்று
மராத்தான் ஓட்டம் ஒன்றும் நடத்தி
தெரிந்த தெரியாத பெருமைகள் பேசி
எங்கெங்கும் விளம்பரப்படுத்தி
குப்பை கூளம் அகற்றி முடிக்க 
தன்னார்வ அமைப்புகள் முனைய
போட்டிகளும் பரிசுகளும் குவிய
சுங்குடி சேலையும் அகல் விளக்குமாய்
வைகையில் வஞ்சியர் வந்து களிக்கும்
ஒரு திருவிழா நடக்கிறது இங்கே
மாமதுரை போற்றுவோம் என்கிறோம்
ஆண்டாண்டிதை நாங்கள் தொடருவோம்

ஆசை

IndiBlogger - The Indian Blogger Community பழகு என்றாள் எனை நெருங்கி
யாரிவள் பாப்பைய்யாவின் மகளா
வேண்டாம் மச்சி வேண்டாம்
இந்த பொண்ணுங்க காதலு
காதுக்குள்ளே நண்பன் குரலு
பொண்ணுங்க எல்லாம் வாழ்வின் சாபம்
இன்னொருத்தனின் நிலையோ பரிதாபம்
கையளவு நெஞ்சுக்குள்ளே
கடலளவு ஆசை வச்சான்
சொய்ங் சொய்ங் நானும் போறேன்
எங்கேடி கூட்டிட்டு போறேன்னு 
அனுபவ ஞானம் பெறுவேனே

Saturday, February 2, 2013

தேவை

IndiBlogger - The Indian Blogger Community மின்வெட்டே ஆனது நல்ல காரணம்
மாற்றி யோசிக்க வேண்டிய தருணம்
கண்டுபிடிப்பின் தாய் தேவையல்லவோ
தாராளமாய் கிடைக்கும் சூரிய ஒளியே
தந்திடும் தடையில்லா நாகரிக வாழ்வு
மீண்ட சொர்க்கமினி நனவாகும் கனவு

Friday, February 1, 2013

கைமணம்

IndiBlogger - The Indian Blogger Community கைமணம் ஒரு காரணம்
கட்டிப்போடும் மந்திரம்
குட்டிப்போட்ட பூனையாய்
காலைச் சுற்றி வரும் குமரன்
தாய்க்குப் பின் தாரம்
தொடரும் பாரம்பரியம்
தழைத்திடும் உறவுகள்
தவமின்றி பெற்ற வரங்கள் 
IndiBlogger - The Indian Blogger Community