Sunday, November 30, 2014

வாழ்க்கை முறை

IndiBlogger - The Indian Blogger Community உணராரோ இங்கிவர் உணராரோ
அறிவியல் வளர்ச்சி அபாரந்தான்
ஐம்புலனுக்கும் சுகம் அதிகந்தான்
அத்தனை கண்டுபிடிப்பும் அருமையே
ஆனாலும் கொடுக்கும் விலை என்ன
கொஞ்சமும் சிந்திக்காமல் திளைக்க
யந்திரங்கள் அடுக்காய் வீட்டுக்குள்
நுழைந்தபின் சிரமமின்றி சடுதியில்
வேலைகள் முடிந்தாலும் அவயங்கள்
வேலையிழந்து நோய்கள் பழகியதே
இயல்பாய் கிடைத்த உழைப்பை 
உடற்பயிற்சியிலே தேடியும்
உடலும் இளைக்கவில்லை 
பிணிகளும் ஒதுங்கவில்லை
எங்கும் எப்போதும் வேண்டும்
செயற்கை குளிரூட்டல் எனில்
வியர்வை சுரப்பிகள் வீணாகி
கழிவகற்றி தேயுதே கிட்னியும்
இயற்கையோடு ஒன்றி வாழாது
இயந்திரங்களோடு பிணைந்து
பிழையாகுதே வாழ்க்கை முறை
புத்திசாலித்தனம் போனதெங்கே

மூப்பே

IndiBlogger - The Indian Blogger Community முன்னே போனால் முட்டி
பின்னே சென்றால் உதைத்து
முடக்குதே படுத்துதே அய்யோ
நான் பாவமில்லையா மூப்பே

காட்டுக்குள்ளே

IndiBlogger - The Indian Blogger Community ராகங்கள் காதுக்கு குளிர்ச்சி
வண்ணங்கள் கண்ணுக்கு விருந்து
வாசங்கள் நாசிக்கு மருந்து
போவோமா காட்டுக்குள்ளே

யந்திரங்களுடன் மட்டும்

IndiBlogger - The Indian Blogger Community கடையில் தானே வியாபாரம் கொழிக்குது
இணையத்தில் விரித்த சந்தையிலே
கத்திரிக்காயும் வீட்டு வாசல் வருமோ
படி தாண்டி போகவும் வேண்டாமோ 
ஆச்சர்யங்கள் இன்னும் என்னென்னவோ
மனித தொடர்பை தொலைக்கும் விதியோ
முகம் பார்த்து பேசாமல் வர்த்தகமோ
யந்திரங்களுடன் மட்டும் வாழ்க்கையோ

பழைய பயபுள்ள

IndiBlogger - The Indian Blogger Community என்றபுள்ள அறிவுக் கொழுந்தல்லவா
அவ அறியாத சங்கதியுமுண்டா
அச்சமில்லாம நடக்குறா நேரா
போகாத இடமெல்லாம் போறா
வானத்த வில்லா வளைக்குறா
மாறாத பழைய பயபுள்ளனதா
மாபாதகமெல்லாம் செய்யுறான்
போகப்பொருளாத்தான் பாக்குறான்

பதில்

IndiBlogger - The Indian Blogger Community நீ சொல்வது தவறென்று
நக்கீரனாய் உரைத்தாள்
மறுத்த மாதொருத்தி
மாதராய் பிறந்திடவே 
மாதவம் செய்திருக்கும்
கவிமணியின் ரசிகை என்
கருத்தை இப்பெண் பிறவி 
சாபமில்லை வரமே என்று
வக்கணையாய் நான் வடித்த
இணையக் கட்டுரைக்கு
கடுப்பாய் பதிலிட்டாள்
வாதங்கள் பல வைத்தாள்
எதுவும் எனக்கு ஏற்பில்லை
நகைப்பே வந்தது படித்து
ஆணுக்குக் கொடுத்தது 
பலகோடி விந்தணுக்கள்
பெண்ணுக்கு வழங்கப்பட்டதோ
ஒரேயொரு சினை முட்டை
மாதத்திற்கு ஒரு முறை
புரியவில்லையா இதிலேயே
பாரபட்சமான நிலையை
படைக்கும் வித்தைக்கு 
போதும் ஒரு முட்டை
பலசாலி பெண்ணுக்கு
பாவம் ஆணுக்குத்தான் 
பலகோடி வேணுமடி
பதில் சொன்னேன் நானும்
பைத்தியக்காரி ஒருத்திக்கு

தன்னை தொலைத்தவள்

IndiBlogger - The Indian Blogger Community அவனுக்காய் உருகியே
சமைத்து சிங்காரித்து
சிந்தித்து சிரித்து என
தன்னை தொலைத்தவள்
தேடிப் பிடித்த சுயமின்று
முன்னே நிற்கிறது காண்

வழி எதுவோ

IndiBlogger - The Indian Blogger Community கண்ணே நீ மூட நேரும் வழி எதுவோ
பறந்த விமானம் மாயமாய் மறையுமோ
தடதடக்கும் ரயில் பெட்டி தடம் புரளுமோ
ஆபத்தில்லா ஓர் வழி சாலையில் விபத்தோ
அக்கறையில்லா மருத்துவ சேவையிலா
வெறியில் அடித்து நொறுக்கும் கொலையிலா
கலாச்சார மாற்றம் தரும் பகீர் அதிர்ச்சியிலா
விதியே இத்தனை கொடூரம் ஏன் கற்றாய்

மகிமை கூடியதே

IndiBlogger - The Indian Blogger Community வெயிலே நிழலின் அருமை கண்டேன்
இருளே ஒளியின் பெருமை அறிந்தேன்
வலியே சுகத்தின் பொருள் உணர்ந்தேன்
ஒன்றால் ஒன்றின் மகிமை கூடியதே

விழித்துக்கொள்ளடா

IndiBlogger - The Indian Blogger Community கண்ணா நீ விழித்துக்கொள்ளடா
கதவுக்குப்பின் நின்று பேசியவள்
கடுகு தாளிக்க மட்டும் தெரிந்தவள்
காணாமல் போனாளடா இந்நாளில்
கச்சிதமாய் உன்னை மாதிரியே
கட்டவிழ்த்து வாழத் துணிந்தாளடா

காத்திருக்குமோ

IndiBlogger - The Indian Blogger Community என்னுயிரும் கூட்டுப் பறவையோ
பாலூட்டி வளரும் சிறு கிளியோ
பறக்கத் தவிக்கும் ஓர் கைதியோ
கதவு திறந்திட காத்திருக்குமோ

எடுத்தாயா பணத்தை

IndiBlogger - The Indian Blogger Community ஆம் என்கிறாள் நெஞ்சழுத்தமாய்
எடுத்தாயா பணத்தை என்றதற்கு
சட்டைப் பையில் எடுத்தது முன்பு
வங்கியில் ஏடிஎம்மில் பிற்பாடு
வீட்டிலிருந்தே எண்ணை அழுத்தி
இணைய சந்தையில் வாங்க இன்று

சுருங்கிய உலகம்

IndiBlogger - The Indian Blogger Community தான் தன் சுகம்
தாரக மந்திரம்
சுயநல இயக்கம்
சுருங்கிய உலகம்

வருகின்ற போது வரட்டும்

IndiBlogger - The Indian Blogger Community வருகின்ற போது வரட்டும்
திருமணமும் விலக்கும்
பதவியும் உயர்வும்
பிறப்பும் இறப்பும்
தடுத்தால் நிற்காது
அழைத்தால் வாராது
உழைத்தால் போதும்
உறங்கு நிம்மதியாய்

கனவு

IndiBlogger - The Indian Blogger Community கனவு வரும் தூக்கத்தில்
கலைந்துவிடும் பகலில்
பகலில் காணும் கனவு
தூங்கவிடாது செலுத்தும்

புதிய பெண்ணினம்

IndiBlogger - The Indian Blogger Community வெளியே குளிருது 
உள்ளே வேர்க்குது
கேள்வி கேட்குது
புதிய பெண்ணினம்
புரட்சி நடத்துது
கூடு கலையுது
பார்த்து கலங்குது
படர்ந்த ஆலமரம்

தக்க தருணத்தில்

IndiBlogger - The Indian Blogger Community தானே நடக்கும்
தடைகள் உடையும்
தக்க தருணத்தில்
தர்ம தேவன் விதி

அழியாமல் ஆடுது

IndiBlogger - The Indian Blogger Community பாராய் பாரில் பல முன்னேற்றம்
பவுசான அதிசயம் பல்லாயிரம்
நொடியில் வரும் தொடர்ப்பின்று
நோயை வென்று நீண்ட ஆயுள்
சொகுசும் சுகமும் அணைக்குது
அறிவின் ஆட்சிமைதனை தாண்டி
அழியாமல் ஆடுது ஆதிவாசியின்
ஆண்குறி காட்டுமிராண்டித்தனம்

சம்சாரம்

IndiBlogger - The Indian Blogger Community கண்டீர் பல வித்தை
கயிற்றின் மேல் நடந்து
அந்தரத்தில் ஊஞ்சலாடி
நுனி விரலில் தாங்கி
சர்க்கஸ்தான் சம்சாரம்
சாதனைதான் எத்தனை

காலம்

IndiBlogger - The Indian Blogger Community இனி ஒரு விதி செய்ய
மனிதனின் மதி ஒளிர
இனிதாயவன் கதி மாற
கனிய வேண்டும் காலம்

விரயம்

IndiBlogger - The Indian Blogger Community “சொல்லுங்க” என்று ஒரு முனையில்
"அப்புறம்" என்று மறுமுனையில்
எத்தனை தரம் அதையே சொல்லிட
செல்லிடைப் பேசியில் கடலை போட
வெட்டியாய் வறுபடும் ஓர் தலைமுறை
விரயம் காலம் பொருள் வாலிப சக்தி

நெஞ்சம் நிறைந்தது இன்பத்தில்

IndiBlogger - The Indian Blogger Community நெஞ்சம் நிறைந்தது இன்பத்தில்
கொஞ்சம் சொர்க்கம் அருகினில்
வெறுமையில் வாடிய என் கூடு
பிருந்தாவனமாய் மாறியதின்று
மக்களும் அவர் தம் மக்களும்
வந்திட்ட களிப்பதனால் உலகம்
உல்லாசமாய் தோன்றிடுதோ
உவகையில் ஊஞ்சல் ஆடுதோ

யாரோ

IndiBlogger - The Indian Blogger Community காணோம் பண்பாட்டை
பழகும் பாங்கை
பொதுநல பொறுப்பை
பணிவான நாகரிகத்தை
பெண்மை போற்றும் 
பெருமையான ஆண்மையை
பொருள் வேட்டையில்
மாக்களாய் மாறுபவர்க்கு
மேன்மையில்லா மூடர்க்கு
புத்தி புகட்டுவார் யாரோ

என்றும்

IndiBlogger - The Indian Blogger Community இளமையது தானே என்றும் இருக்கும்
தளர்ந்து மூன்று காலால் நடந்தாலும் 
உலர்ந்து பல்லும் சொல்லும் போனாலும்
மனதால் வாழலாம் மார்க்கண்டேயனாய்

மறுபடியும்

IndiBlogger - The Indian Blogger Community பிரமை நிறைந்த கண்கள்
குழந்தைப் பருவ நாட்கள்
நடுவில் பல வருடங்கள்
தெளிவான உண்மைகள்
மறுபடியும் மயக்கங்கள்
அவை அந்திம காலங்கள்

நில் கவனி

IndiBlogger - The Indian Blogger Community கூடும் உடலில் துன்பம்
வாதம் பித்தம் கபம்
வினை தவறான விகிதம்
நில் கவனி அது உசிதம்

கீதை

IndiBlogger - The Indian Blogger Community நன்றாய் நடந்தது
நன்றாய் நடக்கிறது
நன்றாய் நடக்கும்
நன்றுரைத்தது கீதை

ஆதங்கமேன்

IndiBlogger - The Indian Blogger Community அடிபெண்ணே ஆதங்கமேன்
உலகை எழுப்பும் சேவல்
அகங்காரம் அதன் கூவல்
பெட்டை நீயிடுவாய் முட்டை
பொறுமையாய் காப்பாய் அடை
இனத்தை காக்கும் உன் குணம்
அதற்கு துப்பில்லா ஆணினம்
அதனோடு ஏன் வீண் மோதல்

உன் பலம்

IndiBlogger - The Indian Blogger Community உணர்வாய் உறங்கும் உன் பலம்
அனுமன் தோளை சிலிர்த்தால்
சிரஞ்சீவியும் சுமையல்லவே
கையில் உள்ளது வெண்ணெய்

வண்டி

IndiBlogger - The Indian Blogger Community நம்பிக்கையுடன் நகரும் வண்டி
ஒரு காலத்தில் ராக்கெட் வேகம்
இன்றோ அதற்கு நத்தை சுபாவம்
நகர்கிறதுதானே பாதை தவறாமல்
தொடரட்டும் இந்த வண்டிப்பயணம்
ஆனந்த நிலையம் அடையும் வரை

ஆனந்தம்

IndiBlogger - The Indian Blogger Community பெருகுமன்றோ ஆனந்தம்
பேராசை இங்கு அனர்த்தம்
சின்ன சின்ன ஆசைகள்
திகட்டாத தேன் துளிகள்

இணையம்

IndiBlogger - The Indian Blogger Community என்றும் பழசின் மதிப்பு பெரிசுதான்
எங்கோ சாலையை வெட்டி மராமத்து
அதனால் நடந்தது இணைய துண்டிப்பு
பாழாய் தோன்றின என் பொழுதுகள்
பழக்கம் மறந்த தோட்ட வேலைகள்
பழக இனிய குடியிருப்புவாசிகள்
நூலகத்திலெடுத்த கதை புத்தகங்கள்
பாழாய் போன புது பித்தான இணையம்
பிடுங்கி நட்டுவிட்டது வேறுலகில்
பொய்யான மாய சொர்க்கத்தில்

சொர்க்கம்

IndiBlogger - The Indian Blogger Community அம்மானை ஆடி 
ஆலவட்டம் சுத்தி
கிளித்தட்டு தாவி
கண்ணாமூச்சியில்
களித்த காலத்திலே
கண்ட சொர்க்கம்
விரல் நுனி ஆடும்
ஆட்டத்தில் இருக்குதா

யதார்த்தம்

IndiBlogger - The Indian Blogger Community நிற்கும் என நினைத்த இடத்தில் நிற்கவில்லை ஊர்தி
விற்கும் என நினைத்த கடையில் விற்கவில்லை வடை
நினைப்பது நடக்காமல் போனால் மிஞ்சும் ஏமாற்றம்
நினைக்காமல் நடக்கும் பல அதிசயங்கள் யதார்த்தம்

போராட்டம்

IndiBlogger - The Indian Blogger Community முடிந்தது ஆகிறது முடியாதது
முதுமையின் ஆதிக்கமாகிறது
பிடித்தது ஆகிறது பிடிக்காதது
பித்தும் பிடிவாதமும் கூடுது
பயணம் நெடுகிலும் தடைகள்
போராட்டம் மட்டும் தொடருது

மனக்குறை

IndiBlogger - The Indian Blogger Community எப்போ வருமென
ஏங்கி தவித்து
வாடி வதங்கி
வருந்திய பின்னே
வந்த மழையும்
விடாது பெய்ய
விடிய விடிய கொட்ட
அதுவும் வருத்தமே
பொல்லா மனக்குறை
கூட வரும் நிழலோ

கிறுக்கு

IndiBlogger - The Indian Blogger Community மடமை என்றால் என்ன
ரசனை மாறிய காலத்தில்
புதுமை எடுக்கும் கோலத்தில்
கவிதை என்ற பெயரில்
கால் மொளச்ச ரங்கோலி
என முழங்க கேட்கையில்
மனம் உணரும் வெறுப்பு
மகிழ மறுக்கும் கிறுக்கு

விதிமுறைகள்

IndiBlogger - The Indian Blogger Community வக்கணையை ஒழித்து வைத்து
வாயை இறுக மூடிக் கொண்டு
வந்த விருந்தினரை உபசரித்து
வழக்கமில்லா வழக்கமாயவள்
வருத்திக்கொண்டதை கண்டு
வெடிக்கப்போகும் எரிமலை
விளையப்போகும் விபரீதம்
விதிமுறைகள் மறப்பேனோ

Monday, November 24, 2014

Food for thought

IndiBlogger - The Indian Blogger Community http://books.google.co.in/books?id=dPlC-ixXiqQC&pg=PA42&lpg=PA42&dq=were+spartans+intolerant+to+physical+defects&source=bl&ots=UqkSz48LZq&sig=mq42Ga8XIptsjylbpK7Wwc2bAr0&hl=en&sa=X&ei=PypzVISDBIy5uAS9yIKACw&ved=0CCoQ6AEwAA#v=onepage&q=were%20spartans%20intolerant%20to%20physical%20defects&f=false

http://www.history.com/news/history-lists/8-reasons-it-wasnt-easy-being-spartan

http://en.wikipedia.org/wiki/Compulsory_sterilization
IndiBlogger - The Indian Blogger Community