வண்டு தான் காட்டும் சமத்துவம்
உண்டோ அதற்கு நிற பேதம்தேடித் தேடி தேனை உண்ணும்பரப்பும் பூமி எங்கும் மகரந்தம்ஓயாத உழைப்பதன் ரீங்காரம்சேவைகெடுத்த ஒரு அவதாரம்
மனதுள் மணக்குது
மதுரை மருக்கொழுந்துமல்லிகை பூச்செண்டுமருதாணி மனோரஞ்சிதம்பவளமல்லி பாரிஜாதம்ஜாதிமல்லி செண்பகம்முகரத் திகட்டா கதம்பம்பொத்தி வைத்த பொக்கிஷம்மலரும் நினைவுகள் தரும்பள்ளி மாணவர் சந்திப்பு
போனதாம் பொற்காலம்
பெருசுகளின் புலம்பல்புரியவில்லை புது கருவிகள்பிடிக்கவில்லை புது அலைகள்பழசை பற்றிக்கொண்டு புதியவற்றை வசை பாடிபடுவது அதிகமாபடுத்துவது அதிகமா
காதலிலே காண்கிறேன் பரிணாமம்
கடக்கும் அது பல வளர் கட்டங்கள்பருவம் எட்டிய இளம் வயதினில் பூவாய் மொட்டொன்று மலர்ந்துகாலூன்றி வாழத் துவங்கியபின்காயாய் அது மெல்ல கடினப்பட்டுகலந்து ஒன்றான முதுமையில்கனியாய் கடைசியில் இனிக்கும்
ஆம் நீதான் முடிவெடுக்க வேண்டும்
உனக்கொரு துன்பம் உடலில் நோவுஆ என அலறி ஊரை கூட்டுவாயாஇவ்வலி யாருக்கும் வந்ததுண்டோபுலம்பி பலத்தை போக்குவாயோபோதாத காலத்தை நோவாயோபல்லைக் கடித்து பொறுப்பாயோபோய்விடும் இதுவும் கடந்து எனதைரியமாய் வலி தாங்குவாயோபொறுப்பாய் விதியை சுமப்பாயோவலியை வாங்கிக்கொள்ள முடியுமோவருந்தும் சுற்றம் மேலும் வருந்தவோவிவேகம் கண்டு வியந்து உருகவோவிரைந்து நீ முடிவு செய்ய வேண்டாமோ
போகுமென்று தெரியும்
அழகும் இளமையும்ஆயுளும் ஆரோக்கியமும்அதிலில்லை அதிசயம்ஆனந்தமான இந்நொடிஅதன் பொருள் கோடி
எனக்குப் படுகிறது இதெல்லாம் தவறென்று
ஒத்துக்கொள்ளவில்லையே இவ்வுலகம்தின்னக்கூடாததை தினம் தின்கிறார்கள்செய்யக்கூடாத பலவும் செய்கிறார்கள்இத்தலைமுறையின் அறிவில் மயக்கம்இதை சொல்லிட எனக்கில்லை தயக்கம்