அமிர்தம் கடைந்தெடுக்க
அசுரர் உதவிடவேண்டும்அதில் பங்கு மட்டுமில்லைஅநீதியின் அமரத்துவம்
சத்தியம் போற்றும் அரிச்சந்திரன்
பிறன் மனை நோக்கா சீதாராமன்கொடுத்து கை சிவந்த கர்ணன்பிரம்மச்சர்யம் தழுவிய பீஷ்மன்தேடுகிறேன் எங்கே அம்மானுடன்இருக்கிறானா அது போல் ஒருவன்
பாட்டெழுத அன்று பனை ஓலை
பரிசளித்து குளிர்ந்தது மன்னர் குலம்பின்னாளில் காகித உபயோகம்படித்திட பாதுகாக்க குதூகலம்தட்டித் தடவி இன்று தகவல் பிறக்கும்எட்டாத விண்ணிலுலகம் பறக்கும்
தன்னால் எடுத்த முடிவுதான் என்றாலும்
தனக்காக பெற்றோர் தேர்ந்தெடுத்தாலும்திருமணம் என்னும் பந்தம் பாழும் கிணறுஎங்கும் உலா வருதிந்த அரியதோர் கூற்று
வலிக்கலாச்சே கையும் காலும்
கண்ணிப்போச்சே கன்னமிரண்டும்விட்டுப்போச்சே குறுக்கெலும்பும்சிவந்துபோச்சே தூங்காத கண்ணும்அம்மம்மா அன்றவன் காதல் மோகம்இன்றோ அவனிடம் மிருக மூர்க்கம்
வாழ்வில் சுவை கூட்டுவதெது
உப்பும் உரைப்புமாவது யாதுசப்பென்றில்லாமல் செய்வதெதுஅடுத்து நடக்கப்போவதென்னஎன்பதின் மர்மமே அதிசயமேநல்லதோ கெட்டதோ வரட்டுமே அறியாமல் இருப்பது ஆனந்தம்அறிந்தால் போய்விடும் நிம்மதி
இத்திறமைக்கே ஆசைப்பட்டேன்
கை வரத்தான் அது மறுக்கிறதேசெடியில்லை நீர் விட்டு வளர்க்கஆடில்லை இலை தழை கொடுக்கஎப்படித்தான் நான் வளர்ப்பேன்வக்கணையாய் கவிதை வடிப்பேன்