Thursday, January 22, 2015

மூத்த தமிழன் வாக்கு

IndiBlogger - The Indian Blogger Community நானறியேன் உலகம் செல்லும் திசை
சிறு வயதில் படித்தேன் பூகோளத்தில்
கிழக்கே ஜப்பானில் நாள் பிறக்கிறது
மெதுவாய் மேற்கும் கண் திறக்கிறது
கடிந்து விரையும் நவீன வான ஊர்திகள்
விரலால் நொடியில் தொலைதொடர்புகள்
கிழக்கு மேற்கு பார்க்கவேண்டாம்
தெற்கு வடக்கு தெரியவேண்டாம்
கிராமமாய் சுருங்கிய கோளமிதில்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
மெய்யானது மூத்த தமிழன் வாக்கு
வேகமிது கொஞ்சம் அச்சமாயிருக்கு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community